முருங்கையிலையை விடுங்க.. இந்த இலையை ஜூஸ் போடுங்க.. கொழுப்பு கல்லீரலுக்கு தீர்வு தரும் பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: கொழுப்பு கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் என்றால் என்ன? இதனை உணவுமுறைகளிலேயே நம்மால் எளிதாக சரி செய்ய முடியுமா?
கொலஸ்டிராலை பொருத்தவரை நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று 2 வகைகள் உள்ளன.. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டிராலை எல்டிஎல் என்றும், கெட்ட கொலஸ்டிரால் எச்டிஎல் என்றும் என்கிறோம்.

இதில், இந்த கெட்ட கொலஸ்டிரால், நம்முடைய உடலில் அதிகமாகிவிடும்போதுதான், கல்லீரல் நேரடியாக பாதிக்கப்படுகிறது.. கொழுப்பு கல்லீரல் பிரச்சினையும் இங்குதான் உருவாகிறது.
கல்லீரல்: இந்த கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய்தான், ஃபேட்டி லிவர் திசீஸ் (fatty liver disease) அதாவது, கொழுப்பு கல்லீரல் நோய் என்கிறோம். இந்த நோய் ஆரம்ப கட்டத்தில், இருக்கும்பொழுது, பெரிய அளவில் நமக்கு விளைவுகளை தராது.. அத்துடன் குணப்படுத்தவும் நம்மால் எளிதாக இருக்கும்.
ஆனால், நோய் தீவிரமாகிவிட்டால், கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு ஆரோக்கியமான திசுக்களும், சேதமடைந்த திசுக்களால் மாற்றப்பட்டு கல்லீரலின் செயல்பாடுகளே பாதிப்பை தந்துவிடும். இறுதியில், கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய்கள் கூட உருவாகலாம்.
கொழுப்பு கல்லீரல்: இந்த கொழுப்பு கல்லீரல் உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. குறிப்பாக, மதுபானங்கள், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, உடற்பருமன், நீரிழிவு நோய் இப்படி பலவித காரணங்கள் இருக்கலாம்..
கல்லீரல் நோய் தீவிரம் அடைந்துவிட்டால், அடிவயிற்றில் வீக்கம் ஏற்படும்.. ரத்த நாளங்களிலும் அழுத்தம் அதிகரிக்கும்.. அதேபோல, கால்கள், கணக்கால், பாதங்களிலும் வீக்கம் ஏற்படலாம்.. இப்படியான பாதிப்புகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், உணவுமுறைகளிலேயே நம்மால் சரிசெய்ய முடியும். உணவில் நிறைய இஞ்சி, பூண்டு, மஞ்சளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை பாதுகாப்பதில் இவைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது..

மஞ்சள் காமாலை: அதேபோல, கல்லீரலுக்கு பலத்தையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது நெல்லிக்காய்.. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களை சரிசெய்யும் அளவுக்கு நெல்லிக்காயில் அத்தனை பண்புகளும் உள்ளன.. மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதில், ஆயுர்வேத சிகிச்சையில் இந்த நெல்லிக்காயைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து, கல்லீரலை காப்பது இந்த நெல்லிக்காய் ஆகும்.
ஒமேகா-3 நிறைந்த உணவுகள், குறிப்பாக சால்மன், டுனா, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களையும் தவறாமல் சாப்பிட வேண்டும். பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் என்ற நிறமியானது, கல்லீரலை பாதுகாக்க துணைபுரிவதால், பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்தால் நல்லது. ரத்த சோகையை நீக்குவதில் பெரும் பங்கு வகிப்பதுடன், சருமத்திற்கும் மிகவும் பாதுகாப்பானது..
பீட்ரூட்: அதுமட்டுமல்ல, கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடிய பண்புகள் இந்த பீட்ரூட்டில் உள்ளதுடன், கல்லீரல் நொதிகளை ஊக்கப்படுத்துகிறது.. மேலும், கல்லீரலை சுத்திகரிக்கிறது. அதேபோல, கிரீன் டீ-யை குறைந்தது 2 வேளையாவது குடிக்க வேண்டும்... லிப்பிட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துவதுடன், கல்லீரலில் லிப்பிட்கள் சேருவதை இந்த கிரீன் டீ தடுக்கிறது...
திராட்சைகள்: கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில், திராட்சைக்கும் பெரும் பங்கு உண்டு.. காரணம் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால், நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.. நாரின்ஜெனின் (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க பெரிதும் துணைபுரிகிறது.
ஒரு பாத்திரத்தில், அரை டீஸ்பூன் மஞ்சள், அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சையின் சாறு கலந்து குடித்தாலே, கல்லீரல் சுத்தமாகும்.. நச்சுக்களும் வெளியேறும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications