கொத்து கொத்தாக காய்த்து தொங்கும்.. பெண்களின் வரப்பிரசாதம் "கருப்பு திராட்சை".. சர்னு வெயிட் குறையுதே
சென்னை: திராட்சையின் பலன்களை லிஸ்ட் போட்டு எளிதில் சொல்லிவிட முடியாது.. அதுவும் கருப்பு திராட்சையை எடுத்து கொண்டால், இயற்கையின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஒயின், ஜூஸ், ஜாம், இப்படி எத்தனையோ வகைகளில் கருப்பு திராட்சை பயன்படுத்தப்படுகிறது என்றாலும், தித்திப்பு நிறைந்த இந்த திராட்சை, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது என்பது ஆச்சரியமான உண்மை.. காரணம், இதில், மிகவும் குறைவான கலோரிகள் உள்ளன.. கொழுப்புகளும் மிகவும் குறைவாக உள்ளன.. நார்ச்சத்துக்களும் அதிகமாக உள்ளன.

உடல் எடை: இந்த திராட்சையை சாப்பிட்டாலே பசி உணர்வு கட்டுப்படும்.. வயிறு நிரம்பிய உணர்வு தோன்றும்.. நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், எளிதில் ஜீரணமாகின்றன.. இதனால், கழிவுகள் நீக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படுகின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சரி, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைப்பவர்களும் சரி, இவர்களுக்கு பெரிதும் துணைபுரிவது கருப்பு திராட்சைதான்.
பெண்களுக்கு இந்த கருப்பு திராட்சை பல்வேறு பலன்களை அள்ளி தருகிறது.. குறிப்பாக, அடிக்கடி திராட்சையை சாப்பிட்டு வருபவர்களுக்கு, சீரான மாதவிடாய் ஏற்படும்.. அத்துடன், வயிற்று வலிகள் நீங்கும். ரத்தசோகை இருப்பவர்கள், கட்டாயம் இந்த திராட்சையை சாப்பிட்டு வரவேண்டும்..
புற்றுநோய்: அதேபோல, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை இந்த திராட்சையில் உள்ளதால், மார்பக புற்றுநோய் அபாயம் குறைகிறது.. திராட்சை சாப்பிடுவதால், எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்...
"இதயத்தை காக்கும் நண்பன்" என்றே இந்த கருப்பு திராட்சையை சொல்லலாம்.. காரணம், இந்த பழத்தில், ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்றஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளதால், தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுத்து நிறுத்துகின்றன.. இதய நோய் மட்டுமல்லாமல், பக்கவாத அபாயமும் இதனால் தடுக்கப்படுகின்றன. இதய பலவீனமானவர்கள், இந்த திராட்சையை சாப்பிடலாம்.
சரும ஆரோக்கியம்: கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவுபெறும்.. இந்த திராட்சையில் வைட்டமின் C, E நிறைந்துள்ளதால், சரும ஆரோக்கியம் காக்கப்படுகிறது. தலைமுடி வளர்ச்சியிலும் திராட்சையின் பங்கு அதிகமாகும்.. இந்த பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" என்ற அமிலம், தலைமுடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்குமாம்.. இதனால் முடி உதிர்வதும் நின்றுவிடும்.
கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.. தினமும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு வந்தால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா பிரச்சனை மற்றும் வாதப்பிரச்சனை உள்ளவர்கள் மட்டும், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications