ஆசனவாய் அரிப்பா.. குடல்புழுக்கள் தொல்லையா.. சூப்பர் டிப்ஸ் நோட் பண்ணுங்க.. கைவசம் இருக்கு வீட்டுவைத்தியம்
சென்னை: சிலருக்கு குடற்புழுக்கள் பெரும் தொந்தரவை தந்துவிடும்.. இந்த புழுக்கள் ஏற்பட என்ன காரணம்? வீட்டு வைத்தியத்தில் இதற்கு ஓரளவு தீர்வு காண முடியுமா?
பூச்சி என்று பொதுவாக சொன்னாலும், உருளைப்புழு அல்லது நாக்குப்பூச்சி (Roundworm), இதயப்புழு (Heartworm), நாடாப்புழு (Tapeworm), கொக்கிப்புழு (Hookworm) என்று பல புழுக்கள் உள்ளன.

குடலில் புழுக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.. தூய்மையில்லாத தண்ணீரை குடிப்பது, சரியாக வேகவைக்காத இறைச்சிகளை சாப்பிடுவது, சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இல்லாமல் இருப்பது இப்படி பல்வேறு காரணங்களினால் புழுக்கள் நுழைகின்றன.
குடல்புழுக்கள்: உடலில் இருக்கும் புழுக்களை அவ்வபோது வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் அந்த புழுக்கள் உறிஞ்சி வாழும். இதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வயிற்றில் குடற்புழுக்கள் இருக்கிறதா? என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம்.. குறிப்பாக, ஆசனவாய் அரிப்பு, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, திடீர் எடை இழப்பு, வயிறு உப்புசம், வாயு தொல்லை, சருமத்தில் அலர்ஜி, அரிப்புகள், முகத்தில் வெள்ளை திட்டுக்கள், மன அழுத்தம், கருவளையம், போன்றவை இருந்தால், குடல் புழுக்கள் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
இதை தவிர்க்க என்ன வழி: நடைமுறை வாழ்க்கையில் சில அடிப்படையான விஷயங்களை, முறையாக கையாண்டாலே, இந்த புழுக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.. இதற்கு அடிப்படையாக தேவையாக இருப்பது, சுயசுத்தமும், சுற்றுப்புற சுத்தமும்தான்.
குறிப்பாக, பாத்ரூம், கிச்சன்களை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கால்களில் செருப்பு அணிந்து வெளியே செல்ல வேண்டும். சாப்பிடும்முன்பு கை கழுவ வேண்டும்.. சுத்தமான பொதுவெளி கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். உடனே கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கை, கால் நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.
உள்ளாடைகள்: மற்றவர்களின் உள்ளாடைகளை அணிய கூடாது. குழந்தைகளுக்கு ஈரப்படுத்திய உள்ளாடைகளை அணிவிக்க கூடாது. ஈக்கள் மொய்த்த உணவுபொருட்களை சாப்பிடக்கூடாது. காய்கள், பழங்கள், கீரைகள் இவைகளை நன்றாக சுத்தப்படுத்தி அல்லது கழுவி பயன்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.,
இந்த குடற்புழுக்களை நீக்க என்ன செய்யலாம்: குடற்புழுக்களை வெளியேற்ற, கற்பூரவள்ளியும், கற்பூரவள்ளி எண்ணெயும் தான் பெரும்பங்கு வகிக்கின்றன.. கற்பூரவள்ளி எண்ணெயை, தண்ணீரில் கலந்து, எலுமிச்சம் சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு நீங்கும்.. அதேபோல, ஆண்டிபயோடிக் நிறைந்த மஞ்சளும் இதற்கு உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய்: சமையலில் நிறைய மஞ்சள், மற்றும் கிராம்பு சேர்த்து கொள்ள வேண்டும். வெறுமனே 2 கிராம்பு எடுத்து மென்று சாப்பிட்டாலே போதும். காரணம், கிராம்பு மிகச்சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாகும். ஆமணக்கு எண்ணெய்யை சூடான ஒரு கப் பாலில், 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை சேர்த்து நான்கைந்து நாள் தொடர்ந்து குடித்து வந்தாலும் பலன்கிடைக்கும். எலுமிச்சம்பழ விதைகளை பொடி செய்து சாப்பிட்டாலும் பலன் தரும். அல்லது பப்பாளி விதையையும், பாலில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் பூண்டு வறுத்து மென்று, மென்று சாறை மெல்ல விழுங்கலாம்.. ஒரு பல் பூண்டை வறுத்து, மசித்து, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு 4 நாள் தந்தாலே குடல் பூச்சிகள் வெளியேறும். பேதி மாத்திரையுடன் வாங்கி விளக்கெண்ணெய் கலந்து குடித்தாலும், பூச்சிக்கள் வெளியேறும்.
வேப்பங்கொழுந்து: 1 பல் பூண்டு, 1 மிளகு, 5 வேப்பங்கொழுந்து எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டு குடித்தாலே குடல் பூச்சிகள் அழியும்.. அல்லது வேப்பங்கொழுந்துடன் கல் உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், பூச்சிகள் இறந்து வெளியேறும்.. தேங்காய் சில்லை சாப்பிடலாம்.. மாதுளம்பழ சாறு நிறைய குடிக்கலாம்.. முட்டைக்கோஸ், கேரட் போன்ற காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications