கல்லீரலை காக்கும் அற்புதம்.. நுரையீரலின் நண்பன்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே ஆயுசு கூடுமே.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவில் நம்மால் தவிர்க்க முடியாதது வெள்ளைப்பூண்டு.. இந்த பூண்டு தரும் மருத்துவ உண்மைகள் நமக்கு தெரியும் என்றாலும், பூண்டு ஜூஸ் தரும் அற்புத பலன்கள் ஏராளம் உண்டு.

அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் என்ற பொருள் நிறைந்துள்ளதுதான், பூண்டின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு பூண்டிற்கு உண்டு..

 Do you know Excellent benefits of Garlic Juice and Garlic is the Best food for Healthy Liver

ரத்த சர்க்கரை: அனிமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம்.. ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். பாலில் பூண்டை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மாரடைப்பு அண்டாது. ஒரு டீஸ்பூன் நசுக்கிய பூண்டை சாப்பிட்டு வந்தாலே இதய நோய் அபாயம் குறைகிறதாம்.. உடலில் ஏற்படும் புற்று நோய் செல்கள் அழிந்து விடும்.. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

பூண்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி பெருகும்.. செரிமான கோளாறுகளும் விலகும்.. உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுகிறது.. அந்தவகையில், எடை இழப்புக்கும் பூண்டு அடித்தளமாகிறது. தினமும் 5 பூண்டு பற்களையாவது, பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன், தொப்பை கரைய துவங்குமாம்.

பூண்டு ஜூஸ்: தாய்ப்பாலை விருத்தி செய்யக்கூடிய இந்த பூண்டினை ஆண்கள் சாப்பிட்டு வரலாம். இதனால், பாலியல் ஆரோக்கியம் மேம்படும். பூண்டு ஜூஸ் மிகுந்த பலனை தரக்கூடியது.. பச்சையாக பூண்டை ஜூஸ் போல செய்து குடித்தால், படை, மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்புகள் உடனடியாக நின்றுவிடும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால், ஆஸ்துமா போன்ற மூச்சுப்பிரச்சினையை எளிதில் சரி செய்யலாம்.. அத்துடன், ரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளும் கரையும். இந்த பூண்டு ஜூஸ், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.. காரணம் இதிலிருக்கும், அலினினானது அல்சினாக மாற்றம் பெறுகிறது... இதில் நிறைய சல்பர் உள்ளதால், நோய்களை எதிர்த்து போரிட தூண்டுகோலாகிறது.

கல்லீரல்: பூண்டு ஜூஸ் குடித்து வருவதால், புற்றுநோய் செல்களின் பெருக்கமும் கட்டுப்படுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இந்த பூண்டு ஜூஸானது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. தொண்டை புண், இருமல் போன்ற மழைக்கால தொந்தரவையும் நீக்குகிறது. அதனால்தான், "நுரையீரலின் நண்பன்" என்று இந்த பூண்டை சொல்கிறோம்.. கல்லீரல் வீக்க நோயிலிருந்து பாதுகாக்க பூண்டு உதவுகிறது.

வெறுமனே பூண்டு ஜூஸ் குடிக்காமல், மாதுளம்பழம் ஜூஸூடன் கலந்து குடித்தால், நிறைய ஆன்டி ஆக்ஸிடைடிங் சேர்ந்து, ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குகிறது. பூண்டை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து, மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்... பிறகு இஞ்சியையும் அதுபோலவே, தோல் சீவி கழுவி சுத்தம் அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு சாறு: இப்போது, வாணலில் ஒரு பாத்திரத்தை வைத்து, இஞ்சி, பூண்டு சாறு தலா ஒரு கப், ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப் என 4 ஜூஸ்களையும் சேர்த்து கலக்கி, மிதமான தீயில், பாதியாக வரும் வரை சுண்ட வைக்க வேண்டும்.. இந்த சாறு 2 மாதம் வரை கெட்டுப்போகாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தாலே உடல் எடை ஓரளவு குறைந்திருப்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+