கழுத்தில் அசிங்கமா "சதை" தொங்குதா? கழுத்தை சுற்றி, அதென்ன கருப்பா?.. இதை ட்ரை பண்ணலாமா? செம டிப்ஸ்
சென்னை: கழுத்தை சுற்றி சதைகள் தொங்குதா? கழுத்தை சுற்றி கருப்பு நிறம் உள்ளதா? இதற்கு என்ன காரணம்? இவைகளை களைய என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்?
கழுத்தில் சதை தொங்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. உடல் எடை அதிகமாக இருந்தால், கழுத்தில் அதிக சதை போடக்கூடும்.. காரணம், உடலின் மற்ற பாகங்களை விட, கழுத்தில்தான் நிறைய கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமனை கொண்டுவந்துவிடுகிறது..

அதேபோல, தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சனைகள், இதய கோளாறுகள் இருந்தாலும், கழுத்தில் சதை விழும். எனினும், இதையெல்லாம் எளிய உடற்பயிற்சியினாலும், எளிய உணவுப்பழக்கத்தினாலுமே குறைத்து கொள்ள முடியும்.
கழுத்து சதைகள்: கழுத்து சதைகள் குறைய, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்..வைட்டமின் B, E, C உள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக வைட்டமின் C எலுமிச்சம் ஜூஸில் உள்ளது.. சிவப்பு குடை மிளகாயிலும் நிறைய வைட்டமின் C உள்ளது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, ஆளி விதைகள் உதவுகின்றன.. இந்த விதையை நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வரலாம்..
ஒமேகா 3 கொழுப்பு இந்த ஆளி விதையில் உள்ளதால், கழுத்து தசைகளை குறைக்க உதவு புரிகிறது. அல்லது, கற்றாழை ஜூஸ் குடிக்கலாம். கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல், இந்த கற்றாழை தடுப்பதால், தினமும் இதில் ஜூஸ் போட்டு குடித்து வரலாம் அல்லது கேரட்டை தினமும ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
கிருமிகள்: அதேபோல சிலருக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்துவிடும்.. நம்முடைய உடலில் சூரிய வெளிச்சம் கட்டாயம் படவேண்டும்.. ஆனால், ஆண்கள் சட்டை காலர்கள், கழுத்தை மறைத்துவிடுவதால், வெளிச்சம் படுவதில்லை.. பெண்கள் நகைகளை அணிவித்து கொள்வதால் அல்லது கவரிங் நகை அலர்ஜி காரணமாக, கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்துவிடும். காரணங்கள் வேறு வேறு என்றாலும், கருமை நிறம் படர்வது என்பது ஆண் - பெண் இருவருக்குமே உள்ள பிரச்சனையாகும்.

இந்த கருமையை போக்க வேண்டுமானால், காய்ச்சாத பசும்பால் மற்றும் ரோஸ்வாட்டர் இரண்டையும் எடுத்து, ஒரு பஞ்சில் நனைத்து, கருமையான இடங்களில் தடவி லேசாக மசாஜ் செய்தால் கருமை நிறம் குறைய தொடங்கும். அல்லது கடலை மாவு + ரோஸ்வாட்டரையும் பயன்படுத்தலாம்.
முல்தானிமெட்டி: இதேபோல, கடலைமாவு + முல்தானிமெட்டியையும் பயன்படுத்தலாம். அல்லது எலுமிச்சை பழத்தை சிறிதாக வெட்டி, சர்க்கரையில் தொட்டு கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் போல தேய்த்தாலும் கருமை குறையும். எலுமிச்சம் பழ துண்டை, தயிர், மற்றும் மஞ்சளுடன் சேர்த்து, கழுத்தில் 10 நிமிடம் தேய்த்து வரலாம்.. கற்றாலை ஜெல் தடவி வந்தாலும் பலன்கிடைக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications