தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை
சென்னை: பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின் வாய் ஆரோக்கியம் அறியப்படுகிறது.. ஆரோக்கியமான ஈறுகள் என்றால், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.. ரோஸ் கலரில் ஈறுகள் இருந்தாலே, அவைகள் பலம்மிக்க உறுதியான ஈறுகள் என்று அர்த்தம்.

பற்கள்: அதேபோல, பற்களில் கறை படிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல் சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்கினாலும், கறைகள் ஏற்பட்டுவிடும்... இந்த கறை படிய துவங்கும்போதே, இதை வீட்டு மருத்துவத்திலேயே சரிசெய்யலாம். குறிப்பாக சில இலைகளை வைத்தே, வெண்மையான மற்றும் ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
பற்களின் கறைகளை நீக்க உதவும் கொய்யா இலை, பல்கூச்சத்தை போக்கவும் உதவும். அதனால், கொய்யா இலைகளை மென்று வரலாம்.கொய்யா இலைகள் ஐந்து எடுத்து நன்றாக கழுவி பிறகு 1 முதல் 2 நிமிடங்கள் பற்களில் படும்படி மென்று உமிழ்ந்து வரலாம்.
துளசி இலைகள்: துளசி இலைகளையும் பற்கள் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தலாம். துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, வாய் கழுவலாம்.. அல்லது இலைகளை மென்று சாப்பிட்டாலே போதும், பற்களில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் பறந்துவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.
வேப்பிலைகள் 4 போதும், மஞ்சள் பற்களே காணாமல் போய்விடும்.. இந்த இலையில், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளதால், பற்களில் தேங்கி கிடக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மை நிறமாக்கும்.. அதனால்தான் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில், வேப்பிலை சேர்க்கப்படுகிறது..
நெல்லிக்காய் இலைகள், கொய்யா இலைகள், வேப்பிலைகள் இப்படி ஏதாவது ஒரு இலைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்து வந்தால், பற்கள், ஈறுகள் பலப்படும்..
தூதுவளை: அதேபோல, தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவையாகும்.. இந்த இலையில் நிறைய கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்துகிறது.. இதனால் பற்களின் ஆரோக்கியம் அதிகமாகிறது. வாரம் 2 முறையாவது தூதுவளையை உணவில் சேர்த்து கொண்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்துவிடும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications