கோழிக்கறி செய்றீங்களா.. சிக்கன் ஈரல் சாப்பிடலாமா? கோழியை இப்படி சமைத்து சாப்பிட்டால் உடல் எடை ஏறாது
சென்னை: கோழிக்கறி சமைக்கும்போது, அதை நன்றாக வேக வைத்து சமைக்க வேண்டும்.. முக்கியமாக, இஞ்சி, பூண்டு நிறைய சேர்த்து சமைக்க வேண்டும்.. அதேசமயம், இந்த கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும், நன்மை, தீமைகள் என்னென்ன தெரியுமா?
சிக்கனில் ஏகப்பட்ட புரதம் இருக்கிறது.. அத்துடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.. குறிப்பாக, வைட்டமின் பி12 நிரம்பி உள்ளது.. இதனால், சிக்கனை சாப்பிட்டடால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

எலும்புகள்: மேலும், எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, எலும்புகளை ஆரோக்கியம் பெறச் செய்கிறது. இன்னும் ஏகப்பட்ட நன்மைகள் இந்த சிக்கனில் இருந்தாலும், சிலருக்கு எப்படி சிக்கன் வாங்குவது என்று தெரிவதில்லை..
சிக்கன் வாங்கினால் எலும்புதான் சேர்த்து வாங்க வேண்டும். இந்த எலும்பில் கால்சியம் உள்ளதுடன், ருசியை தருவது இந்த எலும்புகள்தான்.. போன்லெஸ் சிக்கன் என்று கேட்டு வாங்கி, எலும்புகளில் உள்ள சத்துக்களை இழந்துவிடுகிறார்கள்.
அதேபோல, சிக்கனை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடாது.. நாம் சமைப்பதை பொறுத்துதான், நன்மை, தீமைகள் அடங்கி உள்ளன.. கூடுமானவரையில், கிரில் செய்யப்பட்ட சிக்கனை சாப்பிட சொல்கிறார்கள்.
உடல் எடை: சிக்கன் சூடு கிளப்பும் உணவு. அதனால், தினமும் சாப்பிடக்கூடாது. அதிலும் கோடைக்காலத்தில் சிக்கனை தவிர்க்க சொல்கிறார்கள்.. இந்த சிக்கனுடன் நிறைய மசாலாக்கள் சேர்த்து பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன், இப்படியெல்லாம் சமைக்கும்போது, உடல் எடை இன்னும் கூடிவிடும்..
பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு சாப்பிடுவதால், உடலில் அதிக அளவிலான ஆண்டிபயாடிக் சேர்ந்துவிடுகிறது என்கிறார்கள்.. அதேபோல, பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் உள்ளதால், இதனை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால், பல தொந்தரவுகளை தந்துவிடும்.
சிக்கன் ஈரல்: சிக்கன் ஈரல் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.. காரணம், அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இந்த ஈரலில் தான் உள்ளன.. குறிப்பாக, இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் இப்படி நிறைணுய சத்துக்கள் உள்ளதால், ஈரல் மிகவும் நல்லது..
ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ஈரலை தாராளமாக சாப்பிடலாம். இதனால், ஹீமோகுளோபின் அளவு உயரும்.. போலிக் அமிலமும், B12 உயிர்ச்சத்தும் அதிகமாக உள்ளதால் புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் இந்த ஈரல் உதவுகிறது. உடல் சோர்வு நீங்கி, பலம் பெருகும். ஆனால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை குறைவாக சாப்பிட வேண்டுமாம். கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்..

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளும் சிக்கன் சாப்பிடலாம்.. இதில் புரோட்டீன் உள்ளதால், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை பிரச்சனை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதால் சிக்கனை சாப்பிடலாம்.. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு இது நிச்சயம் உதவும். ஆனால், நாட்டுக்கோழிகளை சாப்பிடுவது, இன்னும் நல்லது.
தவிர்க்கலாம்: இதில் வைட்டமின் A நிறைய உள்ளதால், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. அதேபோல, பதப்படுத்தப்பட்ட சிக்கனில் சோடியம் அதிகமாக இருப்பதால், இதையும், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வைட்டமின் மாத்திரை எடுப்பவர்களும் ஈரல் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.. ஆனால், எப்போது ஈரல் செய்தாலும் நிறைய இஞ்சி, பூண்டு சேர்த்து சமைக்க வேண்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications