மீனில் பெஸ்ட் அயிரை.. இதுதான் அயிரை மீனின் ஸ்பெஷாலிட்டி.. ஆயுசை நீட்டிக்கும் அயிரை மீன்கள்.. சூப்பர்
சென்னை: அயிரை மீன்கள் என்றாலே தனி ருசியை தரக்காரணம் என்ன? இந்த மீன்களினால் கிடைக்கக்கூடிய மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வழக்கமாக எல்லா வகையான மீன்களிலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறையவே உள்ளன என்றாலும், இந்த அயிரை மீனில் மட்டும் ஒமேகா 6 என்ற கொழுப்புச்சத்து அபரிமிதமாக உள்ளது.. இதுதான் அயிரை மீன்களின் முதல் ஸ்பெஷாலிட்டியாகும்.

புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் என அத்தனை சத்துக்களம் அபரிமிதமாக இதில் நிரம்பி உள்ளது, இரண்டாவது காரணமாகும்.
மீன்கள்: இந்த அயிரை மீன்கள் எப்போதுமே நல்ல தண்ணீரில் வளரக்கூடியது... வாய்க்கால்களிலும் சரி, வயல்களிலும்சரி, கண்மாய்களிலும் சரி, நல்ல நீரோடைகளில் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது.. இதுதான் அயிரையின் 3வது ஸ்பெஷாலிட்டியாகும். அதனால்தான், மழை பெய்யும் காலங்களில், நீரோடைகளில் இந்த மீனை பிடிக்க திரண்டு போவார்கள்.
கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால்,, அயிரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மீன்களாக உள்ளது, 4வது ஸ்பெஷாலிட்டியாகும்.
ரத்த ஓட்டம்: இப்படிப்பட்ட அயிரை மீன்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், ரத்த நாளங்களுக்கு நல்லது.. ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.. ரத்த அழுத்த பிரச்சனையை தடுக்கிறது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் இருப்பவர்களுக்கும்சரி, சர்க்கரை நோயாளிகளும் சரி, அயிலை மீன்களை சாப்பிடுவதால், அபாயங்கள் வெகுவாக குறைகின்றன.
அவ்வளவு ஏன்? அயிரை மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவது கிடையாது.. மாலைக் கண் நோய்கள்கூட, ஓடிவிடும்.
வைட்டமின் சத்துக்கள்: அயிரை மீனிலுள்ள வைட்டமின் E சத்துக்கள், நம்முடைய கவசத்துக்கு பாதுகாப்பை தருகின்றன.. அயிரை மீனிலுள்ள கால்சியம் சத்துக்கள், எலும்புகள் பற்களுக்கு வலுவை தருகின்றன..
அயிரை மீனிலுள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு சக்தியை தருகின்றன.. அயிரை மீனிலுள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகளுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை அதிகமாக்குகின்றன.
ருசி அதிகம்: இது எல்லாவற்றையும்விட, இந்த அயிலைக்கு ருசி அதிகம் .. அதனால்தான் எப்போதுமே இந்த மீனுக்கு டிமாண்டு அதிகம்... அதனால்தான் விலையும் அதிகம்.. அதாவது 1 கிலோ அயிரை மீன்கள் 2000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைமையும் உள்ளது.. இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், அயிலை மீன்களை வாரம் 1 ஒருமுறை அல்லது 2 முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்..!!!
மதுரை: மதுரையில் இந்த மீன் மிகவும் ஃபேமஸ்.. மதிய நேரத்தில் அயிரை மீன் குழம்பு கிடைப்பது சாதாரண விஷயம்.. ஆனால், மதுரை ஓட்டல்களில் மட்டும் இரவு நேரத்திலும், சுடச்சுட இட்லியும், அயிரை மீன் குழம்பும் கிடைக்குமாம்.. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள ருசிபோல, இந்த அயிரை மீன் குழம்பு வேறெங்கிலும் ருசியை தந்ததில்லை.. இந்த மீனை குழம்பு செய்யலாமே தவிர, எண்ணெய்யில் டீப் ஃப்ரை செய்து சாப்பிடக்கூடாது. குழம்பு வைத்தாலும்கூட, அதிகமாக சூடாக்கி வேகவைத்தால், இதிலுள்ள சத்துக்கள் குறைந்துவிடுமாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications