முருங்கைக்காய் செய்றீங்களா? முருங்கையின் குச்சியை கீழே போட்றாதீங்க.. ஆயுளை பெருக்கும் முருங்கைக்கீரை
சென்னை: முருங்கைக்கீரையின் நன்மைகளை பட்டியலிட முடியாது.. அதேசமயம், காய்கறிகள், கீரைகள், எதுவானாலும், அதை சூப் வடிவத்தில் சாப்பிடும்போது, சத்துக்கள் முழுமையாக கிடைக்கின்றன.. அந்தவகையில், தவிர்க்க முடியாத உணவுப்பொருள்தான் முருங்கை.
முருங்கையின் தலையாய பயன்கள் என்னென்னவென்றால், உடலின் சர்க்கரையை குறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.. தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்.. தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.. இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு நீங்கும். பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.

தோல் சுருக்கங்கள்: தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்கும்.. முருங்கையை தின்னால் முன்னூறு நோய்கள் விலகும் என்று இதற்குதான் சொன்னார்கள்.
வழக்கமாக, இந்த கீரையில் சாம்பார், பொரியல், செய்வோம். ஆனா முருங்கைக்கீரையை சூப் வடிவில் சாப்பிடும்போது, கூடுதல் பலன் தருகிறது. இதற்கு இளசான முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி எடுத்து கொண்டு, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து கொண்டாலே பல நன்மைகள் கிடைக்கும். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்..
முருங்கைக்கீரை: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்..
அதேபோல, முருங்கை பூக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல் செய்து தரலாம்.. கண்களில் உள்ள எல்லா கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது..
முருங்கைப்பூக்கள்: கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.. பிறகு, இதிலேயே சிறிது கற்கண்டு சேர்த்தும் கொதிக்க வைக்க வேண்டும். அல்லது பால் சேர்த்தும் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
முருங்கைப்பூவில் ரசம் போல செய்து சாப்பிடலாம். இதற்கு முதலில், பருப்பை வேக வைத்து, அந்த கரைசலை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, தக்காளியை பொடியாக நறுக்கி, அதை சிறிதளவு புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் சுத்தம் செய்யப்பட்ட முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதில், பருப்பு கரைசல், கல் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். ஒரு கடாயில், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் ரசம் ரெடி.

முருங்கைக்காய் விதை: வாரத்தில் 2 முறையாவது முருங்கைக்காயின் விதைகளை வேகவைத்து சாப்பிட்டால், ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. முருங்கைக்காயை சமைக்கும்போது, இதன் விதைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.. வெந்துபோன காயில் உள்ள விதைகளை மட்டும் வழித்தெடுத்து, மிளகு, சீரகம் சேர்த்து சூப் போல வைத்து சாப்பிடலாம். இதனால், மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்..
ஈர்க்குகள்: முருங்கைக்கீரையின் ஈர்க்குகள்கூட உடலுக்கு நல்லது.. அதாவது முருங்கையை சுத்தம் செய்யும்போது, அதிலுள்ள இளம்குச்சிகளைதான் ஈர்க்குச்சி என்பார்கள்.. கீரையைபோலவே, இந்த குச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. ஈர்க்குகளில் அதிகளவு கால்சியம் உள்ளது..
மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு உபாதைகள் உள்ளவர்கள், முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. இளம் பெண்களும், இந்த ஈர்க்குச்சியை சமைத்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி நீங்கும்.
இளம் குச்சிகளை நன்றாக சுத்தம் சுத்தம் கொண்டு, அதை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த இடித்த ஈர்க்குச்சிகளை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.. இப்போது, அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பாத்திரத்தில் கலந்து வைத்துள்ளதை கொட்டி இறக்கினால் ஈர்க்குச்சி ரசம் தயார்.
முருங்கை குச்சி ரசம்: இந்த ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்.. து.பருப்பு வேக வைத்து, அந்த பருப்பு தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய், தக்காளி, வெங்காயம், முருங்கை குச்சிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில், பருப்பு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கிவிட வேண்டும். இப்போது ஆறியதும் அதை வடிகட்டிவிட்டு, எண்ணெய், கறிவேப்பில்லை தாளித்து கொட்டினால், முருங்கை ஈர்க்கு சூப் ரெடி
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications