முருங்கைக்காயை விட்றாதீங்க.. தைராய்டு இருக்கா? அப்ப இந்த 8 மேட்டரையும் மிஸ் பண்ணாதீங்க.. செம டிப்ஸ்
சென்னை: தைராய்டு நோயை உணவிலேயே கட்டுப்படுத்தவும் முடியும்.. அந்தவகையில், எந்தெந்த உணவுகளை தவிர்க்கலாம்? எந்தெந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம் என்ற லிஸ்ட்டை வைத்து கொள்ள வேண்டும்.
உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடு போன்றவைகளே, தைராய்டு பிரச்சனைக்கு முதன்மையான காரணங்களாக உள்ளன.

அறிகுறி: உடலுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு ஆகும்.. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறைவது, தைராய்டு குறைவாக சுரக்கும்போது, உடல் எடை அதிகரிப்பது என அறிகுறிகள் தென்படும். எரிச்சல், பதற்றம், உடல்சோர்வு, இதயத்துடிப்பில் மாறுபாடு, முறையற்ற மாதவிலக்கு, அபார்ஷன், போன்றவை ஏற்படலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.. காரணம், இதில் நிறைய கெட்ட கொழுப்புகள் உள்ளதால், தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிடும்.
முட்டைக்கோஸ்: அதேபோல, சல்பர் அதிகமுள்ள உணவுகள், குறிப்பாக, சோளம், ஆளிவிதை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளையும் தவிர்த்து விட வேண்டும்.
அதற்கு பதிலாக, தைராய்டு சுரப்பிகளுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்து கொள்ளலாம்.. குறிப்பாக, பொட்டாசியமும் மக்னீசியமும் அதிக அளவிலுள்ள இஞ்சியை, சமையலில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும்.. சாதாரண டீக்கு பதிலாக இஞ்சி டீயை குடித்து வரலாம். சமையலுக்கு சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
அயோடின் தேவை: தைராய்டு சுரப்பி சிறப்பாக வேலை செய்வதற்கு குறைந்த கொழுப்புள்ள பால், தயிர் மிகவும் முக்கியம்.. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தாலே, மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவை பூர்த்தியாகிவிடுமாம்.
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது.. காலை டிபனில், ஓட்ஸ், பார்லி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.. அத்துடன், தைராய்டு சுரப்பிக்கு நன்மை பயக்கும் முட்டையையும் காலை உணவில் சேர்த்து கொள்ளலாம். இந்த முட்டையில் 16 சதவீதம் அயோடின் உள்ளதை மறுக்க முடியாது.
உலர் பழங்கள்: இதைத்தவிர, பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி, பழங்கள், காய்கறிகளையும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காய்கறிகளில், முருங்கை சாப்பிடுவது மிகவும் நல்லதாம்.. இது தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்துவதுடன், தைராய்டு ஹார்மோன் அளவையும் அதிகரிக்காமல் பாதுகாக்கிறதாம். பழங்களில், மிக முக்கியமானது, செலினியம் நிறைந்த உலர் பழங்களை தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.
அதேபோல, தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், இரவு நேரங்களில் சாப்பிடுவதற்கென்ற சில உணவுகள் உள்ளன.. குறிப்பாக, தினமும் இரவில் நான்கைந்து முந்திரி பருப்பு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு திசுக்கள் பாதுகாக்கப்படும்..
சியா விதை: செலினியம் என்ற தாதுச்சத்து இந்த பருப்பில் உள்ளதால், தைராய்டு அளவும் சீராகவைக்க உதவுகிறது. தினமும் சிறிய துண்டு தேங்காயை சாப்பிட்டு வந்தாலும், தைராய்டு ஆரோக்கியம் சிறக்கும். பூசணி விதை, சியா விதை போன்ற விதைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால், நன்றாக தூக்கம் வருவதுடன், தைராய்டு சுரப்பியும் சிறப்பாக செயல்படும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications