Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கைக்கீரையை இப்படி சாப்பிட்டாலே போதும்.. ஆயுசு பெருகும்.. முருங்கைக்காய் கீரை குழம்பு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்ம விருட்சம் என்றால் அது முருங்கைதான்.. இந்த இரும்புச்சத்துள்ள முருங்கைக்கீரையை இன்னும் சத்தான உணவாக்கி, நாம் எப்படியெல்லாம் சமைக்கலாம் தெரியுமா?

முருங்கையிலையின் தலையாய பயன்கள் என்னென்னவென்றால், உடலின் சர்க்கரையை குறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.. தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்.

Do you know Excellent Health benefits of Drumstick Leaves and Drumstick Gravy is the Best Food

மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்.. தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.. இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு நீங்கும். பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.

தோல் சுருக்கங்கள்: தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்கும்.. முருங்கையை தின்னால் முன்னூறு நோய்கள் விலகும் என்று இதற்குதான் சொன்னார்கள்.

வழக்கமாக, இந்த கீரையில் சாம்பார், பொரியல், செய்வோம். ஆனா முருங்கைக்கீரையை சூப் வடிவில் சாப்பிடும்போது, கூடுதல் பலன் தருகிறதாம்.. அல்லத, இளசான முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து கொண்டாலே பல நன்மைகள் கிடைக்கும். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்..

அதேசமயம், இரும்புச்சத்து நிறைந்த கீரையில், புரோட்டீன் நிறைந்த பருப்புகள் சேர்த்து சமைக்கும்போது, இரட்டிப்பு சத்துக்கள் கிடைக்கின்றன.. கிராமத்தில் எப்போதுமே, முருங்கைக்கீரை கடையல் செய்வார்கள்.. அதேபோல, முருங்கைக்கீரையுடன் முருங்கைக்காய் என இரண்டையுமே சேர்த்து சமைப்பார்கள்.

பாசிப்பருப்பு: இதற்கு, அடுப்பில் ஒரு வாணலி வைத்து, எண்ணெய் சேர்க்காமல், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து, வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். இன்னொரு வாணலில், பாசிப்பருப்பை வேக வைக்க வேண்டும்..

பருப்பு பாதி வெந்ததும், அப்போது, முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து வேக விடவும்.. இப்போது, முருங்கைக்காய் ஓரளவு வெந்ததும், முருங்கைக்கீரையையும் அதனுடன் சேர்த்து வேகவைக்க வேண்டும்.. இப்போது, மசாலா விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இன்னொரு வாணலில், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவினால் முருங்கைக்காய் கீரை குழம்பு ரெடி.

Do you know Excellent Health benefits of Drumstick Leaves and Drumstick Gravy is the Best Food

முருங்கை தோசை: இந்த முருங்கைக்கீரையை, கம்பு மாவுடன் சேர்த்து தோசை போல சுட்டு சாப்பிடலாம்.. கம்புமாவு, தோசைமாவு, அரிசி மாவு, மூன்றையும் சமமாக எடுத்து, சிறிது தண்ணீர், உப்பு, சேர்த்த தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை தோசை மாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இளசான முருங்கைக்கீரையை பொட்டிப்பொடியாக நறுக்க அதையும் மாவில் கொட்டி, தோசை வார்த்து சாப்பிட்டால் சத்துக்கள் நிறைந்த டிபன் ரெடி.

அதேபோல, கேழ்வரகு மாவில் அடை செய்யும்போது, முருங்கை இலை கொழுந்தை அதில் சேர்த்து செய்வார்கள்.. கேழ்வரகும் இரும்பு சத்து.. முருங்கையும் இரும்பு சத்து.. இந்த 2 இரும்பு சத்தும் ஒன்று சேரும்போது, கூடுதல் நன்மை கிடைக்கும்.. பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு ஒரு முருங்கை மரத்தினை அந்த காலத்தில் பெரியவர்கள் வைத்ததில், ஆயிரம் நன்மைகள் இருப்பதை என்பதை மறுக்க முடியாது.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+