இதய நோய்.. மீன் எண்ணெய்யை கர்ப்பிணி சாப்பிடலாமா? மீன் மாத்திரையில் இவ்ளோ இருக்கா? இது தெரியாம போச்சே
சென்னை: நம்முடைய உடலுக்கு தேவையான, ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள், மீன்களில் அதிகம் நிரம்பியிருக்கின்றன.. இந்த ஒமேகா 3 என்ற அமிலத்திலிருந்து தயாரிப்பதுதான், மீன் எண்ணெய்கள். இந்த மீன் எண்ணெய்யை யார் சாப்பிடலாம்? யார் யார் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஒமேகா 3 அதிகமுள்ள, சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்து மீன் எண்ணெய் பெறப்படுகிறது.. மேலும், திமிங்கலம் போன்ற பெரிய மீனிலிருந்தும் எடுக்கப்படும்... பெரும்பாலும் திமிங்கலத்தை நாம் சமைக்க மாட்டோம். அதனால்தான், வைட்டமின் மாத்திரைகள் இந்த மீனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
மாரடைப்பு: இந்த மீன் மாத்திரையை சாப்பிடுவதால், குடல் பகுதி ஆரோக்கியமாகிறது.. சுவாச பிரச்சனைகள் தீர்கின்றன.. அதிலும் ஆஸ்துமா பிரச்சனைக்கு பேருதவி புரிகிறது.. நரம்புகளில் உண்டாகும் பாதிப்பை சரிசெய்கிறது. கண்பார்வை குறைபாடுகள் நீங்குகிறது.. பார்வை கூர்மை பெறுகிறது.. வயிற்றிலுள்ள புண்கள் ஆறுகின்றன... செரிமானம் சீராகின்றன..
இதய நோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது..கொலஸ்ட்ரால் குறைகிறது.. ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவும் குறைகிறது. உடலில் சுறுசுறுப்பு கூடுகிறது. மன அழுத்தம் நீங்குகிறது.. மனச்சோர்வும் தளர்கிறது.. மூட்டுகளில் வலி, முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளை சரியாகின்றன. புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன. சருமம் பளபளப்பாகிறது.. தலைமுடியும் பொலிவுபெறுகிறது.
யாரெல்லாம் சாப்பிடலாம்: கால்சியம் குறைபாடு உள்ள பெண்கள் இந்த மீன் எண்ணெய்யை சாப்பிடலாம்.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த ஒமேகா 3 கலந்த மீன் எண்ணெய்தான் பெஸ்ட் சாய்ஸ்.. தினமும் ஒரு மீன் எண்ணெய்யை தினமும் எடுத்து கொண்டாலே போதுமாம்.. உடலிலுள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்டிரால் குறைந்துவிடும்..
அளவுக்கு அதிகமாக சத்துக்கள் உள்ளது என்பதற்காக, இந்த மீன் மாத்திரையை அனைவருமே சாப்பிடக்கூடாது.. எந்தவித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒருநாளில் மூன்று கிராம் (ஒன்றரை டீஸ்பூன்) என்ற அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமாம். அதிலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: சர்க்கரை நோய், இதய நோய், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிகள் என அனைவருமே டாக்டரின் அனுமதி இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குவதற்கு இந்த மீன் எண்ணெய் தரப்படும் என்றாலும், அதையும் டாக்டர்களின் பரிந்துரையில்தான் தரவேண்டும்.
மீன் எண்ணெய்யில் நலன்கள் பல இருந்தாலும், கொழுப்பு நிறைந்த மீனாகவே வீட்டில் சமைத்து சாப்பிடுவது கூடுதல் பலன்தரும்.. மீன் சாப்பிட முடியாதவர்கள், இந்த மீன் எண்ணெய்யை சாப்பிடலாம்.
சத்துக்கள்: வைட்டமின் D சத்துக்குறைபாடுகளுக்காக இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், மாத்திரையாக சாப்பிடுவதற்கு பதிலாக, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் கடல் உணவுகளையே நேரடியாக சமைத்து சாப்பிடுதே சிறந்தது என்கிறார்கள்.. அதேபோல, சைவ உணவு உண்பவர்கள் ஒமேகா -3 நிறைந்த காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வதை அதிகரிக்கலாம். குறிப்பாக வால்நட், பீன்ஸ், சோயா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது.
அதேபோல, இந்த மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் நிலவிவருகிறது.. பொதுவாக, கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. அதிலும், குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.. முக்கியமாக, புரோஸ்ட்டக்ளாண்டின்கள் இந்த மாத்திரையில் உள்ளன. ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு உதவுவதே இந்த ஒமேகா 3 சத்துக்கள்தான்.

குறைபிரசவம்: ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.. மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் இந்த ஒமேகா 3 உதவுகிறது.
ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்க செய்கிறதாம்.. அதனால், கர்ப்பகாலம் முடிந்த பிறகும்சரி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதும்சரி, ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்கிறார்கள்.. ஆனாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications