Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்குளில்.. கொப்புளம் வந்துவிட்டதா.. அக்குள் சூடு கட்டிகளை கரைக்க "இது" மட்டுமே போதும்.. ஈஸி டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில சமயங்களில் அக்குள் பகுதியில், திடீரென கட்டிகள் வந்துவிடும்.. இந்த கட்டிகள் ஏன் வருகின்றன? இதற்கு எளிய முறையில் தீர்வு என்ன?

அக்குளில் கட்டிகள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.. நோய்த் தொற்றுகள் முதல் புற்றுநோய் வரை எத்தனையோ காரணம் இருக்கலாம். பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று, வைரல் தொற்றுகள் காரணமாக இப்படியிருக்கலாம். முழு உடல்களிலும் ஏற்படும் எய்ட்ஸ் மற்றும் ஹெர்பல் பிரச்சினையாக இருக்கலாம்.

Do you know Excellent Health Benefits of Garlic and what are the Best home remedies for Armpit Lumps

கட்டிகள்: அதேசமயம், உடல் சூடு காரணமாக, இப்படியெல்லாம் கட்டிகள் வருவதுண்டு என்று நினைத்து இருந்துவிடுவார்கள். எனவே, கட்டி அல்லது கொப்புளங்களின் தீவிரத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, கட்டிகள் பெரிதானாலோ அல்லது வலி தந்தாலோ உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். மற்றபடி சாதாரண கட்டிகள் என்றால் தானாகவே வந்துவிட்டு போய்விடும்.. இதற்கு கவலைப்பட தேவையில்லை.. இதற்கு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.. அலர்ஜி தரக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டாலே போதும்.

எண்ணெய் மசாஜ்: வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்யை இதில் எதுவாக இருந்தாலும், லேசாக கூடாக்கி, விரல்களால் தொட்டு, அக்குளிலுள்ள கட்டியின் மீது தடவி, தினமும் 2 வேளை மசாஜ் செய்யலாம்..

அல்லது வெந்நீரில் ஒரு சுத்தமான துணி அல்லது பஞ்சால் தொட்டு எடுத்து, அக்குளிலிலுள்ள கட்டி மீது வைக்கலாம். அதேபோல, எலுமிச்சம் ஜூஸ் குடிக்கலாம். இதனால், உடல்சூட்டினால் வரும் கட்டிகள் என்றாலும் உடனே கரைந்துவிடும். அதேபோல, கற்றாழை சதையை மட்டும் சுத்தமாக கழுவி, கட்டிகளின் மீது வைக்கலாம். இந்த கற்றாழை ஜூஸையும் குடிக்கலாம். வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான பப்பாளி, கேரட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்

மஞ்சள், பூண்டு: சமையலில் நிறைய மஞ்சள், பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இது இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றககூடியது. அதுபோலவே, இந்த மஞ்சளை குழைத்து கட்டிகள் மீது தடவினாலும் பலன் கிடைக்கும்.

Do you know Excellent Health Benefits of Garlic and what are the Best home remedies for Armpit Lumps

வேப்பிரையை பறித்து, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து, கட்டி இருக்கும் இடத்தில் பூசினால், கட்டிகள் குணமாகும்.. அல்லது, கல் உப்பை தூளாக்கி, சிறிது தண்ணீர், மஞ்சள் தூளுடன் குழைத்து, கட்டிகள் மீது தடவினாலும், பலன் கிடைக்கும்.

சூட்டு கொப்பளம்: ஆனால், இவையெல்லாம் சூட்டு கொப்பளத்துக்கு மட்டும்தான்.. 2 நாட்களுக்கு மேல், இந்த கொப்புளங்கள், கட்டிகள் நீடித்தால், நிச்சயம் டாக்டரை சந்திக்க வேண்டும். அதேபோல, அக்குளில் அதிக அளவு வியர்வை வெளியேறினால், ஹார்மோன் கோளாறாக இருக்கலாம்.. சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.. ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளாகவும் இருக்கலாம் என்பதால், இதற்கும் டாக்டரிடம் கட்டாயம் அணுக வேண்டும்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+