முருங்கை இலை பொடி.. 1 ஸ்பூன் கீரையின் நன்மையை பாருங்க.. பவர்ஃபுல் மருந்தாகும் முருங்கைக்கீரை பவுடர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கை கீரைகளிலுள்ள நன்மைகளை பட்டியலிட முடியாது.. முருங்கையிலுள்ள பூக்கள், இலைகள், காய், பட்டை, வேர், என ஒட்டுமொத்த முருங்கை மரமும் நன்மை தரக்கூடியது. அந்த வகையில், முருங்கை இலையின் பவுடர் பற்றி பார்ப்போம்.

மற்ற கீரைகளைவிட அதிக சத்துக்களை கொண்டது முருங்கை.. முன்னூறு நோய்களை போக்கக்கூடியது.. அதனால்தான், அன்றைய காலங்களில், வீடுகள்தோறும் முருங்கை மரங்களை வளர்க்கப்பட்டுள்ளன.

health drumstick leaves

முருங்கை கீரை: முருங்கைக் கீரையில் பசலைக்கீரையை விட 25 முறை அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக வைட்டமின் C சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் A சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது. அதனால்தான், கற்பக விருட்சம் என்று முருங்கையை சொல்கிறார்கள்...

இந்த முருங்கை இலையில் பொடி தயார் செய்து, பயன்படுத்தினால், பல உடல்நலக் கோளாறுகளுக்கு பயன்படுத்தலாம்.. இந்த பொடியில் குளோரோஜெனிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குளோரோஜெனிக் போன்ற அமிலங்கள் உள்ளன.

வெள்ளை துணி: முருங்கை இலைகளை காம்புகள் இல்லாமல் சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி நன்றாக நிழலில் காய வைத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும்.. இதனை ஒரு மெல்லிய வெள்ளை துணியில் சலித்து வைத்து கொண்டால் போதும்.. 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு டம்ளர் வெந்நீரில், அரை ஸ்பூன் முருங்கை இலை பொடியை கலந்து குடித்து வரலாம். அல்லது தண்ணீரில் இந்த பவுடரை கொதிக்கவைத்தும் குடிக்கலாம்.

அல்லது சுடு சோறில் இந்த பவுடரை சேர்த்து லேசாக உப்பு, நெய் கலந்து சாப்பிடலாம்.. அல்லது ரசம், சாம்பார், பொரியல்களில்கூட இந்த பவுடரை தூவி இறக்கலாம். அலலது சூப் போல வைத்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு இந்த பவுடரை தரவேண்டுமானால், தேன் கலந்து தரலாம்.

கெட்ட கொழுப்பு: இந்த பொடியை சாப்பிட்டு வரும்போது, உடல் செல்களுக்கு ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படுகின்றன.. சர்க்கரை நோயாளிகளின், சர்க்கரை அளவு குறையும்.. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், அவர்களின் குளுக்கோஸையும் கட்டுப்படுத்தவும் இந்த பொடி உதவுகிறது.

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.. கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு படிவதை தடுக்கும்.. வயிறு உபாதைகள் அனைத்தையும் இந்த பவுடர் தீர்த்துவிடும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த பவுடர் தீர்க்கிறது.

மார்பகம், கல்லீரல், பெருங்குடல் மற்றும் கணையம் போன்ற சில வகையான புற்றுநோய் செல்களை எதிர்த்து இந்த முருங்கை போராடுகிறது...மன அழுத்தம், வீக்கங்களை (inflammation) கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது. உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இந்த முருங்கையிலை பவுடர் உதவுகிறது

மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை போக்க இந்த முருங்கை இலை பொடி பெரிதும் உதவுகிறது. இதில், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலை வலுப்படுத்தி, ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. இப்படி பல நன்மைகளை இந்த பவுடர் தந்தாலும், மருந்து, மாத்திரைகளை சாப்பிடுபவர்கள், மருத்துவர்களின் அனுமதியை பெற்று, இந்த பவுடரை சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+