மட்டன் செய்றீங்களா.. ஆட்டுக்கறி எலும்பு எடுத்தால் இப்படி செய்து பாருங்க.. "தலைபாரம்" ஓடியே போயிரும்
சென்னை: ஆட்டுக்கறியில் எது பெஸ்ட்? எப்படி மட்டனை சமைத்தால், ஆபத்து கிடையாது தெரியுமா? ஆட்டின் கொழுப்புகள் உடலுக்கு நன்மையா?
நாம் 2 வகையான மட்டனை சாப்பிடுகிறோம்...செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்... செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது.

வெள்ளாடு: ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது..
இந்த மட்டன்களிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி-12 என சத்துக்கள் சமமாக இருந்தாலும்கூட, காலரிகளில் வித்தியாசப்படுகிறது. அதனால், வெள்ளாட்டை பயன்படுத்துவது நல்லது. இதை சாப்பிட்டாலும் மாரடைப்பு வரத்தான் செய்யும்.
எண்ணெய் கூடாது: நிறைய எண்ணெய் சேர்த்து மட்டனை சமைக்க கூடாது.. டீப் ஃப்ரை செய்தும் சாப்பிடக்கூடாது.. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..
குறிப்பாக, கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
மட்டன் கொழுப்புகள்: அதேசமயம், மட்டன் கொழுப்புகள் அபார ருசியை தரக்கூடியது. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள்.. ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்தியே குழம்புகள், பிரியாணிகள் தயாராகும். இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
ஒரு குக்கரில் மட்டன் துண்டுகளுடன் மட்டன் கொழுப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
கொழுப்பு குழம்பு: ஒரு வாணலில் பட்டை, லவங்கம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளி விழுதையும் அதிலேயே கொட்டி, மிளகாய் தூள், தனியாதூள், சேர்த்து குக்கரில் உள்ள கலவையை கொட்டி கிளறி கொதிக்க வைக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கொழுப்பு கிரேவி ரெடி. இந்த குழம்பை செய்யும்போது, கொழுப்பிலிருந்தே எண்ணெய் பிரியும் என்பதால், எண்ணெய்யை சிறிதளவே ஊற்ற வேண்டும்..

மட்டன் எலும்புகளை வழக்கமாக சூப் செய்வார்கள்.. ஆனால், ரசம் போலவும் செய்யலாம்.. எலும்பு துண்டுகளை சுத்தம் செய்து, கழுவி, குக்கரில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்துமல்லி, உப்பு தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய், சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு பற்கள், சேர்த்து வதக்கி, இதனுன் மிளகுத்தூள், சீரகத்தூள், சேர்க்க வேண்டும். இப்போது குக்கரில் உள்ளதை அப்படியே வாணலில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இறுதியில், எலுமிச்சம்பழ ஜூஸ், கொத்தமல்லி சிறிது தூவி இறக்கினால், மட்டன் ரசம் ரெடி. இதில் மிளகு சற்று கூடுதலாக சேர்க்கும்போது, சளி, தலைவலி, தலைபாரம், போன்றவை நீங்கிவிடும்.
ஆட்டுக்கறி: இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.. ஆரோக்கியமானவர்களும்கூட, அளவுடன் இதை எடுத்து கொள்வதே நல்லது. மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?!!












Click it and Unblock the Notifications