Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரண்டை.. கெட்ட கொழுப்பை கரைக்கும்.. உடைந்த எலும்பை இணைக்கும்.. யாரெல்லாம் பிரண்டை சாப்பிடக் கூடாது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவிலக்கு கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது பிரண்டையாகும்.. இந்த பிரண்டையை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

பிரண்டையில் வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.. செரிமானம் மற்றும் வயிறு கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது இந்த பிரண்டை.. குடலிலுள்ள அழுக்குகள், நச்சுக்கள் வெளியேறிவிடும். குடல் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.

Pirandai Weight Loss menstrual periods

பயன்கள்: பெரும்பாலும் எலும்பு முறிவு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பிரண்டையை மருந்தாக பயன்படுத்துவார்கள்.. உடைந்த எலும்பு, முறிந்த எலும்புகளில், புதிய திசுக்களை உருவாக்கியே, அந்த எலும்புகளை ஒன்றிணைத்துவிடும் சக்தி கொண்டது இந்த பிரண்டை. பிரண்டையின் வேரினை பவுடர் செய்து, வெந்நீரில் கலந்து பற்று போல போட்டுவந்தாலே முறிந்த எலும்புகள் கூடிவிடும்...

இதுபோலவே மூட்டுவீக்கங்கள் இருந்தாலும் பற்று போடலாம். பிரண்டையின் சாற்றினை பசும்பாலுடன் கலந்து குடித்து வருவதாலும் உடைந்த எலும்புகள் குணமடையும்.. பிரண்டை தண்டுகளை சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த சாற்றினை தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவதாலும் எலும்புகள் பலம் பெறும்..

எலும்பு முறிவு: எலும்பு முறிவு குணமாகும்வரை, பிரண்டையை துவையல் செய்து கட்டாயம் சாப்பிட வேண்டும். பிரண்டையின் மேல் தோலை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து, அத்துடன் உளுத்தம்பருப்பு, நல்லெண்ணெய், உப்பு, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கி, மிக்ஸியில் அரைத்து எடுத்தால் பிரண்டை துவையல் ரெடி. இதில் நெய் வதக்கி பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் தீரும்.

அடிப்பட்ட வலி, சுளுக்கு, பிடிப்பு போன்றவை இருந்தாலும் இந்த பிரண்டை துவையலே மருந்தாகிறது.. கழுத்தை அசைத்தால் வலி ஏற்படுகிறா? அப்படியானால் இந்த பிரண்டையே இதற்கு சிறந்த மருந்தாகும்.

வாயு தொந்தரவு: வாயு தொந்தரவுகளுக்கும், மூல நோய் தொந்தரவுகளுக்கும் இந்த பிரண்டை துவையல் நல்லது.. பிரண்டை சாப்பிடுபவர்களுக்கு நினைவுத்திறன் அதிகமாகவே இருக்கும். உடல் பலவீனமானவர்களுக்கு தெம்பு தரக்கூடியது..

ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்பினை போக்குவதற்கும், கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் பிரண்டை துவையல் அருமருந்தாகும். இதனால், உடல் எடையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் எல்டிஎல் கொழுப்பையும், ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட வேண்டிய மருந்து, இந்த பிரண்டை துவையலாம்.

மூச்சுத்திணறல்: மூச்சுத்திணறல் இருப்பவர்களும், பிரண்டையின் தண்டு மற்றும் மிளகு சமஅளவு எடுத்துக்கொண்டு துவையல் போல அரைத்து ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிடலாம்.. இதனால் அலர்ஜி நம்மை நெருங்காது.

மாதவிடாய் நேரங்களில் வயிறு வலி, முதுகுவலி, அதிகமான ரத்தப்போக்கினை கட்டுப்படுத்த இந்த பிரண்டை துவையல் உதவுகிறது. 6 டீஸ்பூன் பிரண்டை சாற்றில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தாலே மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.. ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படும்போது பெண்கள் பிரண்டை சாப்பிடக்கூடாது... ஏனென்றால் பிரண்டை அதிக உதிரப்போக்கிற்கு வழிவகுக்கும்.

ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படும்போது பெண்கள், பிரண்டையை சாப்பிடக்கூடாது... ஏனென்றால் பிரண்டை அதிக உதிரப்போக்கிற்கு வழிவகுத்துவிடுமாம்.

சாப்பிடக்கூடாது: யார் யாரெல்லாம் பிரண்டை சாப்பிடக்கூடாது தெரியுமா? கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பிரண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்லதுதான் என்றாலும், டாக்டரை ஆலோசிக்காமல் சாப்பிடக்கூடாது.. காரணம், இதிலுள்ள சிசஸ் குவாட்ராங்குலரிஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+