கணையத்தில் கல்.. சின்ன வெங்காயம் இருக்கா? தயிர் இருக்குல்ல.. கணைய வீக்கத்தை போக்கும் அற்புத உணவுகள்
சென்னை: கணையம் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது. இதற்கு என்னென்ன உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும் தெரியுமா?
நம்முடைய உடலுக்கு கணையம் செய்யும் வேலைகளை பற்றி நாம் பெரிதாக எடுத்து கொள்வதேயில்லை.. மிக முக்கிய ஹார்மோனை இன்சுலின் சுரப்பதோடு, மேலும் பல முக்கிய உடல் நலனுக்கான வேலைகளைச் செய்கின்றன. உடலின் வளர்சிதை மாற்றம், குளுக்கோஸை நிர்வகித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பதே இந்த கணையம்தான்..

கணையம்: இந்த கணையத்தில் கல் வரலாம்.. வீக்கம் வரலாம்.. அழற்சி வரலாம்.. தொற்று வரலாம்.. புற்றுநோயும் வரலாம்.. ஒருவேளை, கணையம் வீக்கம் அடைந்துவிட்டால், அதிகவலி, ஜுரம், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படும்..
ஒருவேளை கணையத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், அதுவே, பின்னாளில் அடைப்பை ஏற்படுத்தி, கணையத்தின் செயல்திறனை குறைத்துவிடும்.. இதனால் செரிமான கோளாறு கோளாறு வரலாம்.. நீரிழிவு நோய் அதிகமாகலாம்.. பித்த நீர் வரும் பாதை அடைபட்டு, மஞ்சள் காமாலை வரலாம்.. ஒருகட்டத்தில் புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம்.
காயங்கள்: அதேபோல, காயங்கள் எதுவுமே ஏற்படாமல் அல்லது உடலில் வேறு எங்குமே அடிபடாமல், வேறு வெளிப்புற காரணங்கள் எதுவுமே இல்லாமல் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கங்கள் ஏற்பட்டால், அவை கணைய அழற்சியின் முக்கியமான அறிகுறியாகும். கால்விரல்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து கொள்வது, அல்லது ஊதா நிறத்தில் மாறுவது இவையெல்லாம் கணையத்தில் அழற்சிக்கான அறிகுறிகளாகும்.
மரவள்ளிக்கிழங்கை அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் பாதிப்புக்கு அதிக காரணம் உண்டு என்கிறார்கள்.. பித்தப்பையில் கற்கள், மது பழக்கம் இவையெல்லாம், கணைய வீக்கத்திற்கு காரணமாகும்..
கணையத்தில் கல்: ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தாலும், சில வகை மருந்துகளாலும், கணைய வீக்கம் ஏற்படலாம்.. எனவே, ஆல்கஹால் நிறுத்த வேண்டும்.. மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தினாலே, பெரிய நோய்கள் கணையத்தை பாதிக்காது.
அந்தவகையில், கணையத்தினை காக்கும் சில உணவுகளை பார்ப்போம்.. இதற்கு கொழுப்பு இல்லாத உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.. முக்கியமாக, சமையலில், எதிர்ப்பு சக்திகள் நிறைந்த பூண்டு, சின்ன வெங்காயம் அதிகம் பயன்படுத்த வேண்டும்.. பசலைக்கீரை கணையத்திற்கு பலத்தை தரக்கூடியது..
பசலைக்கீரை: பசலை கீரையில் நிறைவான ப்ளவனாய்டு நிரம்பியிருப்பதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.. நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால், உடல் கழிவுகளையும் வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை தருகிறது.. வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றுகிறது.
அதேபோல, காளான்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. அதில், நிறைய நார்ச்சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் D2, குறைந்த கலோரி சத்து என அனைத்துமே உள்ளதால், கணையத்திற்கு காளான்கள் பெரிதும் உதவுகின்றன.. கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இந்த காளானில் உள்ளதாம்..
காளான்கள்: அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. குறைந்த அளவு கலோரிகள், குறைந்த அளவு கொழுப்புகளை கொண்டவை என்பதால், கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது..
சர்க்கரை வள்ளி கிழங்கில், பி-6 வைட்டமின் நிறைய உள்ளதால், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது... ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது... இதிலுள்ள விட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது... இதனால், கணையத்திற்கு சிறந்த பாதுகாப்பும் கிடைக்கிறது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications