அமுக்குரா கிழங்கு.. தாம்பத்யம் சிறக்க பெஸ்ட் மெடிசின்.. முருங்கை பிசினின் சூப்பர் ரிசல்ட்.. ஹேப்பி
சென்னை: பெண்களின் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மை குறைபாடுகளை போக்கக்கூடிய எத்தனையோ நவீன மருந்துகள் இருந்தாலும், அவைகளுடன் சத்தான உணவுகளையும் சாப்பிட்டு வரும்போது, கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அந்தவகையில், ஒருசில உணவுகளை பார்ப்போம்.
ஆண்மை குறைபாடுகளை போக்குவதில் முதன்மையாக உள்ளது முருங்கைக்கீரை.. முருங்கைக்காய், முருங்கையிலை இவைகளைவிட, முருங்கையின் பிசின் மற்றும் முருங்கையின் விதைகள் அதிக பலன்தரக்கூடியவையாம்..

முற்றிய முருங்கை: முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். அத்துடன், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நரம்புகள் பலப்படும் என்கிறார்கள்.
முருங்கை பிசினில் நிறைய சத்துக்கள், வேதிப்பொருட்கள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன.. இந்த பிசின்கள் உடலை வலுப்படுத்தக்கூடியது.. இரும்புச்சத்து உட்பட கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் இப்படி பல சத்துகள் பிசினில் நிறைந்திருப்பதால். விந்தணுக்களை அதிகரிக்க செய்கிறது.
கரிசலாங்கண்ணி: அதேபோல, கரிசலாங்கண்ணி கீரையையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், நரம்புத்தளர்ச்சி மெல்ல குணமடையும் என்கிறார்கள். கல்யாண முருங்கையின் பலன்களை பலரும் அறிவதில்லை.. ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைக்கு நிறையவே உண்டு.. இந்த இலையை சிறிது எடுத்து, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். மாதுளம் பழ ஜூஸில், கசகசா தூளை சேர்த்து, இந்த இலையின் சாறுடன் கலந்து 21 நாட்கள் குடித்தால் ஆண்மை பெருகுமாம்..
அரைக்கீரையையும் சுத்தம் செய்து, நெய்யில், சின்ன வெங்காயம் சேர்த்து, கடைந்து சாப்பிட்டாலே ஆண்மை குறைபாடு நீங்க வாய்ப்புள்ளது.. தாளிக்கீரை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது இந்த கீரை.. அதனால்தான், ஆண்மை குறைபாடுகளை போக்குவதற்கு இக்கீரையை மருந்தாகவே பயன்படுத்துகிறார்களாம்..
வெற்றிலைகள்: வெற்றிலைகள் மிகச்சிறந்த மருந்தாகின்றன.. அதாவது, விறைப்பு பிரச்சனை உள்ளவர்கள், வெற்றிலையை இடித்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து மென்று சாப்பிட்டு வரவேண்டும்... அல்லது வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி சிறிது சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்குமாம்.
அமுக்குரா கிழங்கு பொடியும் மிகச்சிறந்த பலனை தரக்கூடியது.. ஆண், பெண் இருவருக்குமே குறைபாடுகள் இருப்பின், இந்த பொடி பயன்படுத்தலாம்.. இது விந்துக்களை பெருக்கும் தன்மை உடையது.. தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்..
பிசின்கள்: கருவேலமர பிசின்கள், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.. இந்த பிசினை காயவைத்து, தூள் செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்கள் ஆற்றல் பெறும் என்பார்கள். இத்தனை இயற்கை மூலிகைகளும், அற்புத மருத்துவ குணம் கொண்டவை என்று சொல்லப்பட்டாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையின் பேரிலேயே இவைகளை மருந்தாக எடுத்து கொள்வது அவசியமாகும்.
சப்பாத்தி கள்ளி: சப்பாத்தி கள்ளியையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம். கர்ப்பப்பையிலுள்ள சினைநீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளி பழம்.. வாரம் 3 முறை சாப்பிட்டுவந்தால், கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும்.
இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தைப்பேறு உண்டாவதுடன், கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்பார்கள்.
குழந்தை பேறு: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்த சப்பாத்தி கள்ளி தரும் நன்மைகள் ஏராளம்.. விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாகமின்றி இருந்தாலோ, இந்த பழம் அவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.. எனினும், இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்று சாப்பிடுவதே, பாதுகாப்பும், ஆரோக்கியமுமாகும்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications