வெறும் 4 போதுமே.. பாதாம் பருப்பை இப்படிதான் சாப்பிடணுமாம்..மளமளன்னு ஆச்சரியம் தரும் ஊறவைத்த பாதாம்
சென்னை: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அதற்கு பெரிதும் துணைபுரியும் பாதாம் பருப்பை விட்டுவிடக்கூடாது என்கிறார்கள்.. அதிலும் ஊறவைத்து பாதாம் பருப்பில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும், சத்துக்களும் அடங்கியிருப்பதுதான் பாதாம் பருப்பு.. ரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்டிஎல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதுதான் இந்த பாதாம் பருப்புகளின் பெரும்பணி.

பாதாம் பருப்பு: பாதாம் பருப்புகளின் தோலில், ஃப்ளேவனாயிட்ஸ் என்ற B வைட்டமின் உள்ளது.. மேலும், எல் கார்னிடைன் என்ற அமினோ அமிலமும், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - B17 சத்துக்களும், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் E, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் அடங்கியிருப்பதுதான், இதற்கெல்லாம் பேருதவி புரிகின்றன.
28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளனவாம்.. 100 கிராம் பாதாம் பருப்பில், 58 % நல்ல கொழுப்பு உள்ளதாம். இதுதான் இதயத்தை காக்கவும் செய்கிறது. இதய நோய் அபாயங்களையும் குறைக்கிறது.. மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.. நரம்புகளின் இயக்கத்தை திறன்பட செயல்பட உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், பாதாம் பருப்புகளை உணவில் தர சொல்கிறார்கள்.
அஜீரணம்: இதனால் அஜீரணம் நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்குகிறது.. குடல் ஆரோக்கியமாகிறது.. இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் நீங்கி, நுரையீரல் பாதுகாப்புக்கு இந்த பாதாம் உதவுகிறது. இதய நோய், சர்க்கரை நோய், சோரியாசிஸ், ரத்தசோகை என பல்வேறு பிரச்சனைகளையும் இந்த பாதாம் பருப்புகள் தீர்க்கின்றன.
வெறும் பாதாம் பருப்பை சாப்பிடுவதைவிட, ஊறவைத்த பாதாம் இன்னும் சத்துக்கள் அதிகமானவை.. காரணம், இது ஜீரணிக்க மிகவும் எளிதானது.. செரிமானமும் எளிதாகிறது.. ஊறவைக்கும்போது நன்மைகள் பெருகுகின்றன. சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கக்கூடிய அசுத்தங்களும் இதனால், நீங்குகின்றன. இந்த ஊறவைத்த பாதாம்கள்தான், மார்பக புற்றுநோயின் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க காரணமாக இருக்கின்றன.
எப்படி சாப்பிட வேண்டும்: தினமும் இரவில் 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த பருப்புகளின் மீதுள்ள தோலை நீக்கிவிட்டு, அரைத்து சாப்பிட வேண்டும்.
இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாட்களும், எடை குறைக்க நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறையும் 5 பாதாம் பருப்புகளை எடுத்து கொள்ளலாம். அதிக பாதாம் சாப்பிடக்கூடாது.. அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும்..
அதுமட்டுமல்ல, பாதாமில் ஆக்சலேட் அதிகமுள்ளதாக சொல்கிறார்கள். இதனால், சிறுநீரகத்தில் கற்கள் வரக்கூடுமாம். அதனால், பாதாமை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல, பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் பித்தம் அதிகமாகிவிடுமாம்.












Click it and Unblock the Notifications