தொள தொள தொப்பைக்கு.. இந்த 2 "மேஜிக்" காய் போதும்.. மின்னல் வேகத்தில் குறையும் உடல் எடை.. இதை பாருங்க
சென்னை: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமானால், காய்கறிகளும், கீரைகளும், பழங்களும் அவசியம்.. அதிலும், இந்த 2 காய்களை அடிக்கடி பயன்படுத்தினால், உடல் எடை குறைவதில் அதிகமாகவே துணைபுரிகிறதாம். ஒன்று, வெள்ளரிக்காய் மற்றொன்று ப்ரோக்கோலி ஆகும்.
இளநீரை போன்றதுதான், வெள்ளரிக்காய் என்று சொல்லப்படும் பச்சை நீர்க்காய் இதை பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும்.. காரணம், சமைக்கும்போது, இதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகிறது. புரோக்காலி குளிர்ச்சியான காயாகும்.

நார்ச்சத்து: வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் நிறைந்துள்ளன.. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது.. மற்ற 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் "பி' போன்றவை உள்ளன.. ஓரளவு வைட்டமின் "சி'யும் இருக்கிறது.
உடல்எடை: இந்த காயில், கலோரிகள் மிக மிக குறைவு.. வெள்ளரி பிஞ்சுவில் நார்ச்சத்து நிறைய உள்ளன.. இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது... இதில் நிறைய நீர்ச்சத்தும் உள்ளது.. அதனால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் தொப்பையை குறைக்கவும் இந்த காய் உதவுகிறது.
தொப்பை: மதிய அல்லது இரவு ஏதாவது ஒருவேளையில், வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பிஞ்சு சாலட் செய்து சாப்பிட்டால், தொப்பை குறையுமாம்.. இந்த காயில், ஸ்டேரோல் என்ற பொருள் இருப்பதால், நம்முடைய உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைய செய்கிறது..
அடுத்ததாக முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலியாகும்.. ஒரு கப் ப்ரோக்கோலியில் மட்டுமே, ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.. ப்ராக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால்தான், உடல் மெலிய நினைப்பவர்களை, இதை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள். கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு..
தொடை பகுதி: கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.. இதை சாப்பிட்டால் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரைந்துவிடுமாம்.. ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுக்கிறது..
வெள்ளரிக்காயை எப்படி பச்சையாக சாப்பிட்டால் பலன் கிடைக்குமோ, அதுபோல, இந்த புரோக்கோலியை, சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து வதக்கி, வேகவைத்து அதில், மிளகு தூள் சேர்த்துசாப்பிடலாம். அல்லது சூப் போல வைத்து சாப்பிடலாம். வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
புரோக்கோலி சூப்: வாணலியில் எண்ணெய், வெங்காயம், பூண்டு வதக்கி, அதிலேயே பொடியாக நறுக்கிய புரோக்கோலியையும் சேர்த்து வதக்கி, பிறகு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இவைகளை ஆறவைத்து மிக்ஸியில் அதைத்து கொண்டு, மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வரும்போது, சோளமாவை கரைத்து ஊற்றி, மிளகு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப் ரெடி,
ப்ரோக்கோலி காபி: இந்த ப்ரோக்கோலியில் காபி போட்டு குடிக்கலாம்.. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே விற்கிறார்கள்.. அல்லது, பொடி கடைகளிலும் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் வீட்டிலேயேயும் எளிதாகத் தயாரிக்க முடியும். ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். பாலில் காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் கலந்து காபி போட்டு குடிக்கலாம்.
அதாவது, 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர், அரை கப் ப்ரக்கோலியை பச்சையாக சாப்பிடுவதற்குச் சமமாம். அதனால், டாக்டரின் ஆலோசனையை பெற்று, இந்த ப்ரோக்கோலியை பயன்படுத்தினால், உடல் எடை ஆரோக்கியமான முறையிலேயே குறைய தொடங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications