தொள தொள தொப்பை.. இந்த "5 மேஜிக் டீ" போதுமே.. ஊளைச்சதை ஈஸியா குறையுதாமே? அற்புதமான புரோக்கோலி காபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமானால், காய்கறிகளும், கீரைகளும், பழங்களும் அவசியம். அதேசமயம், சிலவகை பானங்களும் உடல் எடை குறைப்பதில், முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

உடல் எடையை குறைப்பதிலும் ரோஜா பூக்களுக்கு பெரும் பங்கு உள்ளது.. இந்த இதழ்களை வைத்து, டீ தயாரித்து குடித்தால், நிச்சயம் பல பலன்களை பெற்று தரும் என்கின்றன ஆய்வுகள்.

Do you know Health Benefits of Broccoli Tea and Super health Drinks to reduce your Body weight

ரோஜாவின் இதழ்களை வெயிலில் உலர வைத்து, எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதில், 15 அல்லது 20 எண்ணிக்கை எடுத்துக் கொண்டு, அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.. தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறியதுமே இதை வடிகட்டி குடிக்கலாம்.

ரோஜா இதழ்கள்: அல்லது, இதிலேயே டீத்தூள் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலால் ஆனால், இனிப்பு எதையும் சேர்க்காமல் குடித்தால், உடல் எடை குறைவதில் பலன் கிடைக்கும். இதை தினமும் குடித்து வந்தால், உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் நீங்கும்.. சருமப்பாதுகாப்புக்கும் நல்லது.. தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது.. ரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தமும் நீங்கும்.. சீரான எடையையும் காத்துக் கொள்ள முடியும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

வெல்லம்: அதேபோல, மசாலா டீ தயாரித்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இஞ்சி, ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் மிளகு பொடி, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இறுதியில் வெல்லத்தை சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் மசாலா டீ ரெடி.. மதிய உணவுக்குப்பிறகு, அல்லது வெறும் வயிற்றில்கூட இந்த டீயை குடிக்கலாம்.

வெல்லத்தில் வைட்டமின் A, B, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் எலக்ட்ரோலைட், உடல் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுவதுடன், உடலில் தேங்கும் கொழுப்பை குறைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.
முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலியா மிகச்சிறந்த சத்துக்களை கொண்டது.. ஒரு கப் ப்ரோக்கோலியில் மட்டுமே, ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் இப்படி சத்துக்கள் உள்ளன..

புரோக்கோலி: ப்ராக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால்தான், உடல் மெலிய நினைப்பவர்களை, இதை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள். கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு.. சமையல் செய்து சாப்பிட முடியாதவர்கள், ப்ரோக்கோலிகளில் காபி போட்டு குடிக்கலாம்.. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே விற்கிறார்கள்.. அல்லது, பொடி கடைகளிலும் ரெடிமேடாகவும் கிடைக்கின்றன.

ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.. இறுதியில் வடிகட்டி குடித்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறையும் என்கிறார்கள்.

உடல் எடை: அதாவது, 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர், அரை கப் ப்ரக்கோலியை பச்சையாக சாப்பிடுவதற்குச் சமமாம். அதனால், டாக்டரின் ஆலோசனையை பெற்று, இந்த ப்ரோக்கோலியை பயன்படுத்தினால், உடல் எடை எளிதாக குறைய தொடங்கும்.

சோம்பு என்று சொல்லப்படும் பெருஞ்சீரகம், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வக்கிறது.. துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், போன்றவை பெருஞ்சீரகத்தில் உள்ளதால்தான், உடல் பருமனை குறைக்க, ஆயுர்வேத மருத்துவத்திலேயே, இந்த சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது.

சோம்பு தண்ணீர்: இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது இந்த தண்ணீரில் டீ போட்டும் குடிக்கலாம்.

அதேபோல, உடல் எடையை குறைப்பதற்கு கொய்யாவை போலவே, கொய்யா இலைகளும் உதவுகிறன்றன.. கொய்யா இலையிலும் டீ போட்டுக் குடிக்கலாம்.. கொஞ்சம் இஞ்சியை தட்டி சேர்த்து இந்த டீயில் சேர்த்து குடித்தால், உடல் எடை வெகுவாக குறைய உதவியாக இருக்கும்.. அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல கரைய துவங்குமாம்.

வெங்காயம்: இதில் வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளலாம்.. உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் பெரிதும் துணைபுரிகிறது.. வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது... எனவே, கெட்ட கொழுப்பை வெங்காயம் குறைக்கின்றன.. ஆனால், காய்கறிகளில் சேர்த்து வதக்கினால், வெங்காயத்திலுள்ள சத்துக்கள் அழிந்து விடும் என்பதால், வெங்காயத்தை தனியாகவே, தண்ணீரில் கொதிக்க வைத்து சூப் போல சாப்பிட சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+