Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோழிக்கறி எடுக்கறீங்களா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. இப்படி செய்தால், முகச்சுருக்கம் ஓடிருமாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழிக்கறி வாங்க போறீங்களா? கோழியின் கால்களை தூக்கி தூர போட வேண்டாம்.. இதோ இப்படி செய்து பாருங்க.. ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, சிக்கன் சிறந்த உணவாக உள்ளது.. சிக்கன் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நம்பப்படுகிறது. இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் B, A, D போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கனே சிறந்த உணவாக இருக்கும் என்கிறார்கள்..

 Do you know Health Benefits of Chicken Leg Pieces and What are the Super Uses of chicken Bones

கொலஸ்ட்ரால்: சிக்கனில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றாலும், நியாசின் என்ற சத்தும் உள்ளதால், கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.. சிக்கனில் செலீனியம் என்ற சத்து உள்ளதால், மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது..

வைட்டமின் B5 உள்ளதால், மன அழுத்தத்தை சிக்கன் விடுவிக்கிறது.. சிக்கனில், வைட்டமின் B6 உள்ளதால், இதய நோய்கள் தடுத்து நிறுத்த உதவுகிறது.. சிக்கனில், பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் தருகிறது.

சிக்கன்: சிக்கனில் மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி நீங்குகிறது.. சிக்கனில் ஜிங்க் உள்ளதால், ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.. சிக்கனில், புரதம் உள்ளதால், பெண்களுக்கு அவசியமான உணவாக கருதப்படுகிறது.

இதில் நாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்படுவது கோழியின் கால்கள்தான்.. ஆட்டுக்கால்கள் அனைவராலும் விரும்பப்படும் அளவுக்கு சிக்கன் கால்கள் விரும்பப்படுவதில்லை.. உடைந்துபோன எலும்புகளை விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதுபோல, சில உள்சார்ந்த கோளாறுகளை தீர்க்க இந்த கோழிக்கால்களும் உதவுகின்றன.

கோழிக்கால்கள்: கோழிக் கால்கள் அதிக கொழுப்பு சத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், இது முழுவதுமே உண்மை கிடையாது.. நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. கோழியின் மார்பகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளானது, கோழி கால்களில் உள்ளதை விட குறைவாக இருந்தாலும், கோழி மார்பகங்களை தோலுரித்த பிறகு கோழி கால்களில் உள்ள கொழுப்பின் அளவு, மாட்டிறைச்சி மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவாகவே உள்ளதாம்.

கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை. அத்துடன், ஏராளமான "கொலாஜன்" இந்த கால்களில் நிரம்பி உள்ளன.. இந்த கொலாஜின்தான், நம் உடலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது.. சருமத்தை பாதுகாக்கிறது.. நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுவதே கொலாஜின்தானாம்.

ரத்த சிவப்பணுக்கள்: அடிக்கடி கோழிக்காலை சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கிவிடும். நமக்கான ரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்கவும் செய்கின்றன.. அதுமட்டுமல்ல, கோழியின் கால்களில், புரோட்டீனும், கால்சியமும் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்க இந்த கால்கள் உதவுகின்றன.

மற்ற சிக்கனை போலவே, இந்த கோழியின் கால்களில், குழம்பு செய்யலாம்.. சிக்கன் 65 செய்யலாம்.. ஆனால், சூப் செய்து குடிப்பதையே பலரும் விரும்புவார்கள்.

கால் சூப்: இந்த சூப் செய்வதற்கு, முதலில் கோழியின் கால்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோழி கால்களை அதில் போட்டு, எடுக்க வேண்டும். பிறகு, கோழியின் கால்களில் உள்ள மெல்லிய மஞ்சள் நிற தோலை கையாலேயே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, கால் விரல்களை வெட்டித்தள்ளி விட்டு, கால்களை மட்டும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

கோழிக்கால் குழம்பு: இப்போது, ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் + கோழி கால்களை அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தபிறகு, மிளகுதூள், கொத்தமல்லி தூவி இறக்கினால், கோழிக்கால் சூப் ரெடி. அதேபோல, வெறும் கோழிகால்களை சுத்தம் செய்து, வெறும் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்தும் சூப் செய்து குடிக்கலாம்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+