கொத்து கொத்தாக காய்க்கும்.. பெருமாளுக்கு பிடிச்ச கொத்தவரங்காய்.. பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்!
சென்னை: கொத்து கொத்தாக காய்க்கும் கொத்தவரக்காயின் மருத்துவ நலன்கள் என்னவென தெரியுமா? இதை தெரிந்து கொண்டால் லேசான கசப்பு சுவை இருந்தாலும் இனி அதை தவிர்க்காதீர்கள்.
காய்கறிகள், பழங்களில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால்தான் இவற்றை அதிகமாக சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனினும் எல்லாரும் எல்லா காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவார்கள் என சொல்ல முடியாது.

சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. அந்த வகையில் கொத்தவரங்காயை சிலர் சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். அதில் லேசான கசப்புத்தன்மை இருப்பதால் அதை தவிர்க்கிறார்கள். ஆனால் அந்த காயில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் யாரும் அதை விடமாட்டார்கள்.
புரட்டாசி மாதங்களில் காய்க்கும். இது பெருமாளுக்கு உகந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு படையலிடும் போது கொத்தவரங்காய் பிரதானமாக இருக்கும். பெருமாள் கோயில்களில் கூட காய்கறி, பழங்களை படையலிடும் போது இந்த கொத்தவரங்காய் இடம்பிடிக்கிறது. அப்படி இந்த கொத்தவரங்காயில் என்னதான் இருக்கிறது என பார்க்கலாம்.
இதில் ஏராளமான புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. மேலும் அதிக அளவிலான விட்டமின்கள் சி, கே, ஏ கார்போஹைட்ரேட்கள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாச்சியம் உள்ளிட்டவை இருக்கிறது. அதில் கொழுப்பு இல்லை. அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் இந்த காய் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இதை தங்கள் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதில் போலிக் ஆசிடும் இருக்கிறது. கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

இரும்பு சத்து இருப்பதால் ஹீமோகுளோபினை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கும். கொத்தவரங்காயில் போலிக் ஆசிட் இருப்பதால் இதை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ரத்த கொதிப்பையும் இது கட்டுப்படுத்துகிறது. இந்த காயில் ஹைப்போ கிளைசீமிக் மற்றும் ஹைப்போ லிபிடெமிக் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
வயிறு சம்பந்தமான பிரச்சினை தீர்க்கிறது. பலமிதமான நோய்களை விரட்டி அடிக்கிறது. மூளையை அமைதிப்படுத்துகிறது. இதில் விட்டமின் கே இருப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு நன்மையை கொடுக்கிறது. கருவின் இயல்பான வளர்ச்சிக்கும் பிறவி கோளாறுகளை குறைக்கவும் இது உதவுகிறது. இந்த காயில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும். கொத்தவரங்காயில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications