முருங்கை வாங்குறீங்களா? இந்த "2 விதை" கையிலெடுங்க.. மளமளன்னு வெயிட் குறையும் பாருங்க.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், நன்மை பயக்கும் 2 வகையான விதைகளை பார்ப்போம்.
முருங்கை விதை பற்றி அனைவரும் அறிந்ததுதான்.. ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்றவை உள்ள இந்த விதை, ஆண்களுக்கு பலனளிக்கக்கூடியது.. முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் இருப்பதால், பெரும்பாலும் லேகியம் தயாரிக்கவே பயன்படுத்துகிறார்கள்.

முருங்கை விதை: இந்த முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும். பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். இந்த விதைகளை நிழலில் உலர்த்தி, அரைத்து பொடி செய்து, பசும்பாலில் இரவு 21 நாட்கள் கலந்து ஆண்கள் குடிக்க வேண்டும் என்பார்கள்.
இந்த விதைகளில் அதிக அளவு ஜிங்க் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தி, சீராக பராமரிக்க துணைபுரிகிறது.. அத்துடன், சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது.. எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும்.
வெள்ளரி விதை: முருங்கை விதை போலவே பயன்தரத்தக்கது.. வெள்ளரி விதையாகும்.. இந்த வெள்ளரியை சாப்பிடும்போதே விதையுடன்தான் சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த விதையில்தர்ன, நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் E, போன்றவை அடங்கி உள்ளன.. சரும வறட்சியை போக்கி, சருமத்தைப் பளபளப்பாக்குவதில், இந்த வெள்ளரி விதைக்கு நிறைய பங்குண்டு.. தலைமுடி நன்றாக வளரும்..
ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ளதால், புற்றுநோயை தடுத்து நிறுத்தும்.. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும். சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரி விதையை தண்ணீர் சேர்த்து அரைத்து, தொப்புளை சுற்றி பற்று போடலாம். இதனால், குளிர்ச்சி இறங்கி சிறுநீர் தாராளமாக பிரியும்.
அல்லது இந்த விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தாலும், சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.. பித்தநீர் இருந்தாலும் நீங்கவிடும்.
நீர்ச்சத்து: அதேபோல, உடல்எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெள்ளரி விதைகளை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், இந்த விதைகளில் உள்ள நீர்ச்சத்துக்கள், கொழுப்பை எரிக்க உதவுகின்றன.. இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால், தாராளமாக சாப்பிடலாம்.
இதுபோலவே, நாம் உணவில் எடுத்து கொள்ளப்பட வேண்டியது சப்ஜா விதைகளாகும். ஃபலூடா விதைகள் என்று சொல்வார்கள். ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.. அதாவது, 11 கிராம் புரதம், 5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2 கிராம் நார்ச்சத்து உள்ளதால், உடல் எடை குறைப்புக்கு மிகச்சிறந்த உணவாக இது கருதப்படுகிறது. இதை சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதையும் குறைந்துவிடும்.

ஊளைச்சதைகள்: இந்த விதையை நீரில் ஊறவைத்துதான் சாப்பிட வேண்டும். துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் A,B,C இப்படி பல சத்துக்கள் உள்ளதால், பித்தத்தையும், உடல் சூட்டையும் தணித்து குளிர்ச்சி தரக்கூடியது..
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது.. மலச்சிக்கலை போக்கக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடியது.. இரும்புச்சத்து நிறைய இருப்பதால், அனிமியா பிரச்சனையை விரட்டக்கூடியது. அதிக நார்ச்சத்து கொண்ட இந்த சப்ஜா விதைகள் சளியை போக்குகிறது..
டாக்டர்கள் அட்வைஸ்: குறிப்பாக, பெண்களுக்கு இந்த விதைகள் மிகவும் நல்லது.. அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சினைகள் இருக்கும் பெண்கள், 2 டீஸ்பூன் சப்ஜா விதைகளை, ஊறவைத்து குடித்து வந்தால் நிறைய பலன்கள்கிடைக்கும், ஆனால், குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்த விதையை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இது உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜனின் அளவை குறைத்துவிடும்.. அதனால், டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை சாப்பிடவே கூடாது.












Click it and Unblock the Notifications