சட்டென 29A பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. டிக்கெட் வாங்கி பயணம்! டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 127.21 கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த விழாவின் ஹைலைட்டாக கொடியசைத்ததோடு நின்றுவிடாமல் திடீரென பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A ரூட் புதிய பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், அதில் சர்ப்ரைஸ் பயணம் மேற்கொண்டார்.

நாட்டிலேயே மிக சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கி வரும் சூழலில், இதனை மேலும் மேம்படுத்த அரசு தொடர்ச்சியாகப் புதிய பேருந்துகளை வாங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக இந்த 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.

VIjay TVK Bus

கடந்த 3 நாட்களாகப் பேருந்துகள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஒருவழியாக அத்தனை விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று முதல் இந்த 300 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை உட்பட தமிழகத்தின் 6 முக்கியப் போக்குவரத்து கோட்டங்களின் கீழ் இவை இயக்கப்படவுள்ளன. 164 டீசல் பேருந்துகளுடன் சேர்த்து, 134 அதிநவீன சிஎன்ஜி பேருந்துகளும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த விழாவின் ஹைலைட்டாக கொடியசைத்ததோடு நின்றுவிடாமல் திடீரென பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A ரூட் புதிய பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், அதில் சர்ப்ரைஸ் பயணம் மேற்கொண்டார்.

பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்தபடி தனது மொபைலில் வீடியோ எடுத்தவாறு முதல்வர் விஜய் பயணித்தார். சாலையில் நின்றிருந்த பொதுமக்களை நோக்கி அவர் உற்சாகமாகக் கையசைத்தபடி பயணித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+