மீனு மீனேய்.. மீன்களை வாங்கினால் இதை மறக்காதீங்க.. மீன் "இந்த அளவுதான்" சாப்பிடணுமாம்.. அற்புத நலன்
சென்னை: மீன்களில் பல சத்துக்கள் இருந்தாலும், எந்த நாட்களில் வாங்குவது சிறந்தது தெரியுமா? கடல் மீன்களையே அதிகம் உட்கொள்ளும்படி நிபுணர்கள் சொல்ல என்ன காரணம் தெரியுமா? ஒருநாளைக்கு எவ்வளவு மீன்கள் சாப்பிட வேண்டும் தெரியுமா?
மீன்களில் நிறைய சத்துக்கள் இருப்பதால்தான், அதனை உணவில் தாராளமாக சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். இத்தனை சத்துக்கள் கிடைக்கிறது என்றாலும், வைட்டமின் C மட்டும் இந்த மீன்களில் கிடையாது. மீன்களில், கடல் மீன்கள்தான் பெஸ்ட்.. அதிலும் சிறியவகை மீன்கள் அதைவிட சிறப்பு.. அதேசமயம், சிறிய வகை மீன்களை அதிகம் சாப்பிட சொல்கிறார்கள்.

கால்சியம் : இதற்கு காரணம், இந்த மீன்களீல் நிறைய கால்சியம் உள்ளன.. மேலும் பலவிதமான தாதுக்களும், வைட்டமின் A, D, அயோடின் போன்ற சத்துக்களும் குட்டி மீன்களில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் எல்லாமே நினைவாற்றலை வளப்படுத்துகின்றன.. மேலும், குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால்தான், உடல் எடை குறைபவர்களும் இந்த சிறிய வகை மீன்களை உணவில் சேர்த்து கொள்கிறார்கள்.
இதனால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது.. ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை சமன்செய்கிறது. மூட்டு நோய்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.
கடல் மீன்கள்: அதேபோல, முட்கள் அதிகமாக இருக்கும் மீன்களை வாங்க கூடாது.. ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களையும் வாங்கக்கூடாது. காரணம், ஆழ்கடல் மீன்களில், நிறைய ரசாயன பொருட்கள் நிறைந்திருக்குமாம்.
இன்னொரு காரணமும் உள்ளது.. கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களும், அவைகளின் முட்களும் சுற்று பெரிதாக இருக்கும். ஆனால் குளத்து, பண்ணைகளில் மீன்களில் முள் சிறியதாக இருக்கும்.. அதேபோல, கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால், சோடியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இது நம்முடைய உடலுக்கு தேவைப்படும் சத்தாகும்.. ஆனால் குளத்து, பண்ணை மீன்களில் சோடியம் மிகவும் குறைவு. அதேபோல, கடல் மீன்களில் உள்ள கால்சியம், மற்ற மீன்களில் இருப்பதில்லை.
நன்மைகள்: எவ்வளவுதான் நன்மைகளை மீன்கள் தந்தாலும், தினமும் 50 கிராம் மட்டுமே மீன் சாப்பிடுவது சிறந்தது.. அதாவது தினமும் இரண்டு துண்டுகள்.. வாரத்திற்கு 350 கிராம் மீன்கள் மட்டுமே நாம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மீன்களை எங்கே வாங்குகிறோம் என்பதும் முக்கியம்.. கடற்கரையிலேயே, அதுவும் மீன்களை பிடித்ததுமே வாங்குவதுதே சிறந்தது என்கிறார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதை வைத்தே, மீன்களின் தரம் கணக்கிடப்படுகிறது. . மீன்களை வாங்கும்போது, அமோனியா, பார்மலின் நாற்றம் வருகிறதா என்பதையும் முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும்..
சுத்தம் செய்வது: மீன்களை கழுவுவதிலும் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. சோப்பு, சோப்புபவுடர் மாதிரியான கெமிக்கல் போட்டு மீன்களை கழுவக்கூடாது. சில மீன்களை சாம்பல் போன்ற பொருட்களை வைத்து, கழுவுவார்கள். கொஞ்சம் கல் உப்பு, தயிர் கலந்த நீரில் கழுவலாம். மோர் இருந்தால், அதிலும் கழுவலாம்..
அல்லது உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு கொண்டு கழுவலாம்.. கல் உப்பு, சிறிது ராகி இவைகளை கலந்து நீரில் கழுவினாலும் மீனின் துர்நாற்றம் போகும்.. ராகி மாவு எதற்கென்றால், மீனின் அனைத்து பகுதிகளிலும் சென்று தேவையில்லாத அழுக்குகளுடன் ஒட்டிக்கொண்டுவிடும்.. பிறகு, குளிர்ந்த நீரில் கழுவும்போது ராகி மாவு மீனிலுள்ள அழுக்கை வெளியேற்றிவிடும். சிறிது வினிகர் பயன்படுத்தி கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்..
ஆனால், இத்துடன், கடலைமாவு பயன்படுத்தி கழுவினால் இன்னும் நல்லது.. இன்னொரு சீக்ரெட்டும் உண்டு.. மீன் சமைக்கும்போது, ஈரமான துண்டை கிச்சனில் தொங்க விடுவார்களாம்.. இது, மீனின் கெட்ட வாசனையை ஈர்த்துவிடுமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications