தொள தொள தொங்கும் ஊளைச்சதை.. வெறும் 3 உணவுகளை சாப்பிட்டாலே போதுமாமே.. அடியோடு மாறும் இளமை தோற்றம்
சென்னை: இளம் வயதிலேயே சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடுகிறதே ஏன் தெரியுமா? இவைகளை வெகு சில பொருட்களை வைத்தே, ஆரோக்கியமான முறையில் சரி செய்வது எப்படி தெரியுமா?
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மிகப்பெரிய கவலையை சிலருக்கு தந்துவிடும். இதை சரி செய்ய, உதவுவதுதான், கொலாஜன்.. நம்முடைய உடலில் இருக்கும் ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்..

ஒருவருடைய சருமம் பளபளப்பிற்கு காரணமே இந்த கொலாஜன்தான்.. சருமம் மட்டுமல்லாமல், எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் இந்த கொலாஜன் உற்பத்தியாகிறது.
சுருக்கங்கள்: உடலுக்கும், அழகுக்கும், இந்த கொலாஜன் மிகவும் தேவை.. உணவுமுறைகளிலேயே இந்த கொலாஜனை இயற்கையாகவே நாம் கொண்டுவந்துவிடலாம்..
சரியான முறையில், சரியான உணவை மேற்கொள்ளும்போது, கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். முக சுருக்கங்கள், முதுமைத்தோற்றம் போன்றவைகளை நீக்கவும், சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும், இறுக்கமாகவும், கடின தன்மையை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் வைத்திருக்கவும் கொலாஜன் உதவுகிறது..
கண்கள்: இந்த கொலாஜன் உற்பத்தி, குறைந்துவிடும்போதுதான், கண்கள், கைகள், முகங்கள், நெற்றியை சுற்றி சுருக்கங்களும், சிறு சிறு கோடுகளும் தோன்றுகிறது.. இந்த சுருக்கங்கள்தான், முதுமை தோற்றத்தையும் தருகிறது. சுருக்கங்களை நீக்கினாலே, முதுமை தோற்றமும் நீங்கிவிடும். அதற்கு கொலாஜனை அதிகப்படுத்த வேண்டும்.
மாய்சரைஸர்கள், லோஷன்களில் கொலாஜன் கிடைக்கும்.. அதேபோல, மாத்திரைகளும் உண்டு.. ஆனால், இதையெல்லாம் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.. கடைகளில் சில தவறான கொலாஜன் உற்பத்தி மாத்திரைகளும் கிடைப்பதால், அதையெல்லாம் வாங்கி உபயோகப்படுத்தாமல், முடிந்தவரை வீட்டிலேயே எந்தவித பக்க விளைவும் இல்லாமல், சத்தான உணவு மூலம், கொலாஜன் உற்பத்தியை நாம் அதிகப்படுத்தலாம்.
முதலாவதாக காய்கறிகள்: பச்சைக்காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு இவைகள் அனைத்துமே நிறைய கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அதிலும், வைட்டமின் சி நிறைந்த குடைமிளகாய், இரும்புசத்து நிறைந்த கீரை, கொத்தமல்லியை தவறவிடவே கூடாது..
சோயா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். காரணம், சோயாவிலும் கொலாஜன் அதிகம் உள்ளது. சருமத்தின் வயதாவதற்கு வழிவகுக்கும் என்சைம்களை இந்த சோயா தடுக்கிறது.
இரண்டாவதாக பழங்கள்: வைட்டமின் C நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள், அதாவது, ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், கொலாஜன் உற்பத்தி தூண்டப்படும். மாம்பழம், கிவி, அன்னாசி, போன்ற வெப்பமண்டல பழங்கள் வைட்டமின் சி- நிறைய உள்ளது.. கொலாஜனை அதிகரிப்பதில் இந்த பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதிலும், ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகைகள். அவகோடா பழங்கள்- வைட்டமின் E, C அதிகம் நிறைந்துள்ளதால், இவைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
அசைவ உணவுகள்: முட்டை இதில் முதன்மையானது.. புரோலின், லைசின், அமினோ போன்ற அமிலங்கள் இதில் உள்ளன. மீன்களில், சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள்-ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. அதேபோல மட்டன் மற்றும் சிக்கனின் எலும்பு சூப்களை சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகளிலும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப்பில் நிறைய கொலாஜன் கிடைக்கும்..
அதேபோல, பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் சியா, பிளக்ஸ் விதைகளையும் சாப்பிடும்போது, 'கொலாஜன்' என்ற புரோட்டின் அதிகரிக்கிறது. ஆனால், அரிசி, மைதா, கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை இதையெல்லாம் சாப்பிடுமபோது, நம் உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தி அளவு குறைந்துவிடுமாம்.. அதனால், முடிந்தவரை இந்த உணவுகளை தவிர்க்க சொல்கிறார்கள்.
பூண்டு: அதேபோல, உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்து கொண்டால், சருமத்துக்கு அவ்வளவும் நல்லதாகும்.. பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் கொலாஜனை உருவாக்க உதவுகிறது.. மேலும் சுருக்கங்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications