வெறும் வயிற்றில் இந்த "டீ" போதும்..வெயிட் அசால்ட்டா குறையும் பாருங்க.. உடல் எடை குறைக்கும் 2 சூப்கள்
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றாலும், உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது காய்கறிகளும், பழங்களும்தான்.
பொதுவாகவே அனைவரும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமென்றாலும், வெறும் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ்கள், சூப்கள், டீ, கசாயம், போன்று வேறுவகைகளில் குடிக்கும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கிறது.. உடல் கழிவுகள் நீங்குகிறது.

அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.. புத்துணர்ச்சி கிடைக்கிறது. அந்தவகையில், 2 விதமான பானங்களை செய்து குடிப்பதால், உடல் எடை வெகுவாக குறைய உதவுகிறது.
வெல்லம்: இதில் ஒன்று வெல்லம்.. தித்திப்பு பொருள்தான்.. ஆனால், இரும்புச்சத்து அதிகம்.. பெண்களுக்கு மிகவும் நல்லது.. உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்...
சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தை இன்றும் பயன்படுத்துகிறார்கள்.. ஆஸ்துமாவுக்கு நிவாரணம் தரக்கூடியது.. வெல்லத்தில் நார்ச்சத்தும் அதிகம்.. எனவே, உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு அல்லது வேர்க்கடலை போன்ற ஜீரணிக்க முடியாத உணவுகளை சாப்பிட்டவுடன், ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதை, முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். அந்த அளவுக்கு செரிமாணத்துக்கு வெல்லம் உதவுகிறது.
வெல்லம் டீ: வெல்லத்தில் வைட்டமின் A, B, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் எலக்ட்ரோலைட், உடல் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலில் தேங்கும் கொழுப்பை குறைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது. இதில், டீ போட்டு குடிக்கலாம்.. வழக்கமாக, பால் சேர்த்து டீ போடும்போது, வெல்லம் சேர்ப்பார்கள் என்றாலும், பால் இல்லாமலேயே இந்த டீ போடலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, இஞ்சி, ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் மிளகு பொடி, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இறுதியில் வெல்லத்தை சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் மசாலா டீ ரெடி.. மதிய உணவுப்பிறகு, அல்லது வெறும் வயிற்றில்கூட இந்த டீயை குடிக்கலாம்.
வெங்காயம்: அடுத்து, உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் பெரிதும் துணைபுரிகிறது.. வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண், கண்வலி குணமாகும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெங்காயம் குறைக்க உதவுகின்றன
வெங்காயத்தை காய்கறிகளில் சேர்க்க வதக்கினால், சத்துக்கள் அழிந்து விடும் என்பதால், வெங்காயத்தை தனியாகவே, தண்ணீரில் கொதிக்க வைத்து சூப் போல சாப்பிடலாம். பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் மிக்சியில் பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, அரைத்து வைத்த பவுடர், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்..

வெங்காய சூப்: பிறகு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து, ஆற விட்டு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து, அதனுடன், சோள மாவு கரைத்து, மிளகு தூள், தேங்காய்ப்பால், கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். தேவைப்பட்டால், இந்த வெங்காய சூப்பில் புரோட்டீனுக்காக பனீரையும்சேர்த்து கொள்ளலாம்.
முட்டைக்கோஸ் ஜூஸ்: முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி கொண்டு, அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், புதினா இலைகள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.. இதில், சிறிது கல் உப்பு, சிறிது எலுமிச்சம் சாறு, சிறிது மிளகுதூள் சேர்த்தால், முட்டைக்கோஸ் ஜூஸ் ரெடி.
இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் குடித்தால், உடல் எடை குறையுமாம்.. காரணம், முட்டைகோஸில் கார்போஹைட்ரேட் என்பது சுத்தமாக கிடையாது.. அதனால், இந்த ஜூஸ் குடிக்கும்போது, அதிகமான கொலஸ்டிரால் கரைந்துவிடும்.. தொப்பை, மற்றும் தொங்கும் தசைகளும் குறைய ஆரம்பித்துவிடும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications