"சோளம்" விதைக்கையிலே.. நீரிழிவு நோய் பிரச்சனையா..அப்ப உடனே இதை செய்யுங்க..சூப்பர் "வெள்ளை அமிர்தம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளில் மிக மிக முக்கியமானது சோளம்.. ஆனால், இதனை பெரும்பாலானோர் சரிவர பயன்படுத்துவதில்லை.. சோளத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சோளத்தை எப்படியெல்லாம் உணவில் பயன்படுத்தலாம் தெரியுமா?

வெள்ளை சோளத்தில் கால்சியம், வைட்டமின்B, இரும்புச் சத்து, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் என பல்வேறு சத்துக்கள் உள்ளன.. இவையெல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குகின்றன

Do you know Health Benefits of Jowar and White Solam is the Best food for Weight Loss

பற்களுக்கு இந்த சோளம் மிகவும் நல்லது.. பல்வலியை போக்கி, ஈறுகளையும் பலப்படுத்துகிறது.. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகளுக்கும் பற்களுக்கும் நன்மை பயக்கிறது.

நார்ச்சத்துக்கள்: அபரிமிதமான நார்ச்சத்து இதில் உள்ளதால், அஜீரணத்தை போக்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. இதனால், குடல் ஆரோக்கியம் பெறுகிறது.. மலச்சிக்கல் உள்ளவர்கள், சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களின் அருமருந்து இந்த சோளம்.. சோளத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

வெள்ளை சோளத்தில், நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்து, எடை அதிகம் ஏறிவிடாமல் பாதுகாக்கிறது.. நீரழிவு நோய் உள்ளவர்கள், கம்பு மாவுடன், சோளமாவையும் கலந்து களி போல செய்து சாப்பிடலாம்.. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் சோளம் முக்கிய பங்கு வகிகிறது. மூட்டு வலிகளுக்கும், எலும்பு தேய்மானங்களுக்கும், இந்த சோளம் தீர்வை தருகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்கின்றது. குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது.

சோளக்களி: சோளத்தில் களி மட்டுமல்லாமல், சோறு பொங்கலாம்.. அடை செய்யலாம்.. பாயாசம் செய்யலாம்.. வடை செய்யலாம்.. இட்லி, தோசை செய்யலாம்.. பிஸ்கெட், ரொட்டிகளும் செய்யலாம்.. உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

உப்புமா செய்ய வேண்டுமானால், முதலில், சோளத்தை ரவையாக உடைத்துக்கொள்ள வேண்டும்.. பிறகு, அரிசியைம் ரவபோல உடைத்து கொள்ள வேண்டும்.. பிறகு, சம்பா ரவையையும் எடுத்து கொள்ள வேண்டும்.

சோளம் உப்புமா: 3 ரவைகளையும் லேசாக வாணலில் வறுத்து எடுத்துக் கொண்டு, ஒரு வாணலில், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து, 3 வகையான ரவைகளின் 1 பங்குக்கு, மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். பிறகு, நீர் கொதித்ததும், 3 ரவைகளையும் கொட்டி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம். இந்த உப்புமாவில், பீன்ஸ், கேரட், போன்ற காய்கறிகளையும் வேகவைத்து செய்யலாம்.

இந்த சோளத்தில் அடை போல செய்யலாம்.. சோளத்துடன், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளந்தம்பருப்பு சம அளவு எடுத்து ஊறவைத்து, அதனுன், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, துருவிய தேங்காய், எல்லாம் சேர்த்து அரைத்து அடை போல ஊற்றி சாப்பிடலாம். இந்த மாவு புளிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

சத்துமாவு: அரிசி, கோதுமையைவிட ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் இதில் உள்ளதால்தான், சத்துமாவுக் கஞ்சியில், முக்கிய இடத்தை இந்த வெள்ளை சோளம் பிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+