சின்னதா மூணு கிவி பழம் போதும்.. அடுத்து நடக்கும் ஆச்சரியத்தை பாருங்க.. கிவி பழங்கள் இவ்வளவு நல்லதா!
சென்னை: கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது.. என்னென்ன தெரியுமா?
முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் இந்த கிவியாகும்.. வைட்டமின் C, K, E, போலேட், பொட்டாசியம் சத்துக்களும், ஏகப்பட்ட ஆன்டி ஆக்ஸிடன்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. எனவே, உடல் எடை குறைக்க முயற்சிப்போருக்கு கிவி சிறந்த பழமாகும்.

ரத்த அழுத்தம்: இந்த பழத்தில் வைட்டமின் C அதிகமுள்ளதால், ரத்த அழுத்தத்திற்கு சிறந்த உணவாக உள்ளது.. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.. இதனால் உடலுக்கு தொற்றுகள் எளிதில் தாக்காமல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், அஜீரணத்தை போக்கி, செரிமானத்தை சீராக்குகிறது.. இதனால் வயிறு ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
மற்ற பழங்களில் இல்லாத 2 சிறப்புகள் இந்த கிவி பழத்தில் உள்ளன.. அதாவது, ரத்தம் உறைவதை தடுக்கும் சக்தி இந்த கிவி பழத்துக்கு உண்டு.. அதுமட்டுமல்லாமல் ரத்த கொழுப்புகளால் ஏற்படும் அபாயத்தையும் கிவி பழங்கள் தடுக்கின்றன..
வைட்டமின் A: கிவியில் வைட்டமின் A நிறைய உள்ளதால், கண் கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க முடியும்.. கிவியில் வைட்டமின் D நிறைய உள்ளதால், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.. குறிப்பாக, கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணியை கிவி பழங்கள் செய்கின்றனவாம்.. ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களை பாதுகாத்து, சருமத்தையும் பொலிவுபெற செய்கிறது.
இதய செயல்பாட்டை சீராக வைப்பதற்கு இந்த கிவி உதவுகிறது.. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினமும் 3 கிவி பழங்களை சாப்பிட்டால் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, இதயம் ஆரோக்கியத்துடன் இருக்குமாம்..
கிவி பழம்: தினமும் இப்பழத்தை சாப்பிட்டால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குவதுடன், மாகுலார் சிதைவிலிருந்தும் கண்களை காக்கிறதாம் கிவி பழம். அதாவது, கண் பார்வை சிதைவை 36 சதவீதமாக இந்த பழம் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெருங்குடல் புற்றுநோயை இந்த பழம் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை முறையில், கிவியை உணவாக எடுப்பது, தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. உணவு பழக்கத்தில் கிழி பழங்களை சேர்ப்பது சில வகையான புற்றுநோய்கள் உருவாவதை முன்கூட்டியே தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் இந்த கிவி தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்துமா கோளாறு: ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகளையும் கிவி பழம் தீர்க்கின்றன.. எனவே, சளி, இருமல் காய்ச்சலுக்கு இந்த கிவி பழங்களை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications