இதுதான் சூப்பர்.. ஒரே "இலையில்" இத்தனை ஆச்சரியமா? ஆண்களின் ஸ்பெஷல் கீரையை உடனே நோட் பண்ணிக்குங்க
சென்னை: கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவைதான். ஆனாலும் சில கீரைகளை சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்துவதே கிடையாது. அப்படிப்பட்ட கீரைதான் கொடிபசலைக்கீரை.
2 வகையான கொடி பசலைகள் உண்டு.. ஒன்று பச்சை கலரில் இருக்கும், இன்னொன்று சிவப்பு கலரில் இருக்கும்.பார்ப்பதற்கு, உருண்டு,திரண்டு, சிறிய அளவில் பருமனாக இருக்கும். உள்ளுக்குள் உணவாகவும், சருமத்துக்கு மருந்தாகவும் இந்த கீரை பயன்படுகிறது.

2 வகைகள்: ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த கொடி பசலை, தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரக்கூடியது.. இந்த கீரை மட்டுமல்லாமல், இதன் தண்டுகளிலும் சத்துக்கள் நிறைய உள்ளன. இலைகள் + தண்டுகள் இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் ஏ,பி, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.
வழக்கமாக கீரை சாப்பிட்டாலே, ரத்த விருத்திக்கு நன்மை என்றாலும், இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும்போது, ரத்தம் சுத்தமாகும்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கக்கூடியது.. சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பலம் கிடைக்கும்.. குடல்பகுதி சுத்தமாகும்..
உடல் உஷ்ணம்: பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு சற்று அதிகமாகவே உண்டு.. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய கீரை என்பதால், உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி ஏற்படும்.. சிறுநீர் துவாரத்தில் எரிச்சலை தணித்து, சிறுநீர் போக்கை அதிகப்படுத்தக்கூடியது. ஆனால், சளி, கபம் இருக்கும்போது மட்டும், இந்த குளிர்ச்சி கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு இந்த கீரை மிகவும் உகந்தது.. இதனால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்... உடல் சூடு இருந்தால், இதை பாசிப்பயறுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
சரும பலன்: அதேபோல சரும அழகிற்கும் இந்த கொடிபசலை நன்மை தருகிறது.. இந்த கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும்.. உடலில் அரிப்பு, தீப்புண்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள் போன்றவற்றிற்கும், இந்த கீரையின் சாறு உதவுகிறது. வீக்கம், கட்டிகள் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு, இந்த கீரையை வதக்கிக்கட்ட வேண்டும்..
இந்த கீரையின் சாறு எடுத்து குடித்து வந்தால், அல்லது 10 முதல் 20 மி.லி. வரை பூசிவந்தால், ஆணுறுப்பில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறுமாம். உடலில் அலர்ஜி ஏதாவது ஏற்பட்டுவிட்டால், இந்த கீரையை சிறிது நெய் விட்டு கலந்து மசித்து, அந்த இடத்தில் தடவி வந்தால் அலர்ஜி மறைந்துவிடும்.
கீரை சூப்: மற்ற கீரைகளை போலவே, இந்த கீரையையும், சின்ன வெங்காயம் சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால், சூப் போல வைத்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.. இதற்கு காளிஃபிளவரை பொடி பொடியாக நறுக்கி, வெண்ணெயில் லேசாக வதக்க எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த கொடிப் பசலை கீரையையும், பூண்டையும் பொடியாக நறுக்கி, வெண்ணெய்யில் வதக்கி எடுத்து கொண்டு, மொத்தத்தையும் சேர்த்து சூப் போல வைத்து குடிக்கலாம்.. அதேபோல, பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், தோல் நீக்கிய உருளைக்கிழங்கு போன்றவற்றை அரைத்து, கெட்டி தயிரில் கலந்து, இந்த கீரையையும் நறுக்கி சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சம் சாறு கலந்தால் கொடிப்பசலை கீரை பச்சடி ரெடி.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications