மினுமினுக்குதே.. குப்பைமேனி, அட வெந்தயக்கீரை.. அதென்ன பொன்னாங்கண்ணியா? தங்கம் போல மின்னவைக்கும் கீரை
சென்னை: கீரைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக இருக்கக்கூடியவை என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், ஆரோக்கியத்துடன், அழகையும் அதிகரிக்க செய்வதில் சிலவகை கீரைகளுக்கு மட்டுமே கூடுதல் பலன்கள் உள்ளன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
வெந்தயக்கீரை, மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கக்கூடியது.. அஜீரணத்தை போக்கக்கூடியது.. மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யக்கூடியது.. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, ஆகியவற்றை குணப்படுத்தக்கூடியது.

வெந்தயக்கீரை: கண் பார்வை கோளாறுகள் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகளின் அருமருந்து இந்த வெந்தயக் கீரை எனலாம்.. 40 நாட்களுக்கு, இந்த கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவும் கட்டுப்படும். குடல் புண்களும் குணமாகும்.. இந்த கீரையை பச்சையாகவே பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு பற்றுப்போட்டாலே, காயங்கள் விரைந்து குணமாகிவிடும்.
உடலை அழகாக வைத்து கொள்வதில், இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு.. இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு கப் தயிரில், சிறிது கல் உப்பு, ஒருகைப்பிடி வெந்தயக்கீரை, கறிவேப்பிலை கொழுந்து, இவைகளை ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில், இவைகளை சாப்பிட்டு வந்தாலே சரும ஆரோக்கியம் மேம்படும்.. தோலில் மினுமினுப்பு ஏற்பட துவங்கும்.
பொலிவு பெறும்: அதேபோல, வெந்தயத்தை, வாணலியில் வறுத்து, பொடி செய்து எடுத்து வைத்துக் கொண்டால், தண்ணீரிலோ/மோரிலோ கலந்து குடித்து வந்தால், முகம் பொலிவுபெறும். இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால், முழு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நைசாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வதுநின்றுவிடும்.
அடுத்ததாக, பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம்.. பச்சை நிறத்தில் நீண்ட இலைகளுடன் கூடிய பொன்னாங்கண்ணியே மிகுந்த பலனை தரக்கூடியது. இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் கட்டினால் கண் பார்வை மேம்படும். மூல நோயை விரட்டும். ஆஸ்துமா பிரச்சனைவரை அனைத்தையும் விரட்டக்கூடியது இந்த கீரை.
பொன்னாங்கண்ணி: பொன் போன்ற சருமம் மின்னிட இந்த பொன்னாங்கண்ணி கீரை போதும். பொன்+ஆம்+காண் +நீ = பொன்னாங்கண்ணி ஆகும். அந்தவகையில், இந்த கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளக்கும்.. முகவசீகரம் கூடிவிடும்.
அல்லது பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் உடல் அழகு பெறும். இந்த கீரையுடன், பாசி பயறு மாவை கலந்து பயன்படுத்தும்போது, முகம் நல்ல பொலிவை பெற்று, அழகான தோற்றத்தை தரும்.. முகத்தில் பருக்கள், வடுக்கள் மறைந்துவிடும். பாசி பயிறு மாவுக்கு பதில், முல்தானி மட்டியையும் சேர்த்து கொள்ளலாம்.
குப்பைமேனி: அதேபோல, குப்பை மேனிக்கீரைக்கும் உடல் அழகை கூட்டுவதில் முக்கிய பங்கு உள்ளது.. மேனியை பளபளப்பாகும் குணம் கொண்டது இந்த கீரைகள்.. தோலில் சொறி, சிரங்கு, புண், கரும்புள்ளிகள் போன்றவற்றை விரட்டக்கூடியது இந்த குப்பை மேனிக்கீரை.. இந்த கீரையுடன் மஞ்சள், கல் உப்பு சேர்த்து மை போல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தாலே கரும்புள்ளிகள் மறைந்து, சருமஅழகு கூடும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications