"மத்தி மீன்" வாங்கறீங்களா?.. சாளை மீனை இப்படி சாப்பிட்டால், உடல் எடை குறையுமாம்.. அதென்ன சாளை தொக்கு
சென்னை: மீன்களிலேயே மிகவும் சத்தானது மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது, இந்த சாளை மீன்கள்.. இந்த சாளையின் நன்மைகள் என்னென்ன? சாளையில் எப்படி குழம்பு, வறுவல் செய்யலாம் என்று பார்ப்போம்.
ஒருகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, சாளை மீனுக்கு இந்த வேற ரேஞ்சுக்கு டிமாண்டு கூடிவிட்டது.. காரணம், மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனில் உள்ளதுதான்,..

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தி மீன் என்பார்கள்.. கேரளத்தில் இதை, சாளை, பேசாளை என்பார்கள்.. அவர்களுக்கும் சென்னையில் இருந்துதான் மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
பயன்பாடுகள்: இந்த மீனின் பயன்பாடுகள் பற்றி ஆரம்பத்தில் அவ்வளவாக தெரியவில்லை.. இதற்குபிறகுதான், சாளையின் அருமை, மருத்துவ உலகுக்கே தெரிய துவங்கியது. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய மீன் இது..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது.. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும்.
கால்சியம்: கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. முன்கழுத்து கழலை நோய்களை வராமல் தடுக்கிறது. கர்ப்பக்காலத்தில் பெண்கள், இந்த மீனை சாப்பிட்டுவரும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனை, கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிட்டு வந்தால், குறைகள் நீங்கும்..
வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கக்கூடியது.. ஆஸ்துமாவை தடுத்து நிறுத்தக்கூடியது. புற்று நோய்களின் அபாயத்தை தடுக்கக்கூடியது. சாளை மீனின் செல்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகளே தயாராகின்றன.. அந்த அளவுக்கு சருமத்தை பளபளப்பாக இந்த மீன் உதவுகிறது. அதுவும் இயற்கையான பளபளப்பை தருகிறது..
பாதரசம் இல்லாத மீன்: பொதுவாக கடல்வாழ் உயிரினங்களில் நச்சு இருக்கும் என்பார்கள்.. ஆனால், அதெல்லாம் பெரிய மீன்களில் தான் உண்டு. மத்தி மீனில் குறைவான அளவு நச்சுதன்மையே இருக்கும் என்பதால், தயக்கமின்றி தாராளமாகவே இந்த மீனை எடுத்துக் கொள்ளலாம்.. குறைந்த விலையில், பல உடல்தொந்தரவுகளை விரட்டியடிக்கக்கூடியது இந்த சாளை மீன்.
அரை கிலோ சாளை மீனை, நன்றாக மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து நான்கைந்து முறை கழுவி எடுத்து கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு இதனை வெறும் வாணலில் வறுத்து, நைசாக பொடித்து கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது சுத்தம் செய்யப்பட்ட மீனில், வறுத்த பொடியையும், அரைத்த விழுதையும் கொட்டி, தயிர், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சம் சாறு, கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, 2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். ப்ரிட்ஜ்ஜில் வைத்தால் இன்னும் சிறப்பு. இறுதியில், எண்ணெய்யில் மீன்களை பொரித்து எடுத்தால், சாளை வறுவல் ரெடி.

மண்சட்டி: மண்சட்டியில், சாளை மீன்களை குழம்பு வைக்கும்போது, தேங்காய் அரைத்து ஊற்றாமலேயே செய்யலாம்.. ஆனால், கேரளா ஸ்டைலில், மீனில் தேங்காய் ஊற்றி செய்யும்போது, தனி சுவையுடன் இருக்கும்... வாணலில், காய்ந்த மிளகாய், மல்லி விதை, மிளகு, தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை என ஒவ்வொன்றையும் வறுத்து, ஆற வைத்து, பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதே வாணலில், எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலையை வறுத்து, அதில் புளித் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, இறுதியில் சாளை மீன் துண்டுகளை சேர்த்து, 5 நிமிடத்தில் இறக்கினால் சாளை மீன் குழம்பு ரெடி.
சாளை தொக்கு: இந்த சாளை மீனில் தொக்கு செய்யலாம்.. ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, அதிலேயே தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து, லேசாக புளித்தண்ணீரையும் ஊற்றி கொதிக்க விட்டு, இறுதியில் சாளை மீனை சேர்த்து இறக்கினால், தொக்கு ரெடி
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications