முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை, எந்தெந்த மீன்களில் நிறைந்துள்ளன?
கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களும், அவைகளின் முட்களும் எப்போதுமே சற்று பெரிதாக இருக்கும். ஆனால் குளத்து, பண்ணைகளில் மீன்களில் முள் சிறியதாக காணப்படும்.

உப்பு நீர்: அதேபோல, கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால், சோடியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இது நம்முடைய உடலுக்கு தேவைப்படும் சத்தாகும்.. ஆனால் குளத்து, பண்ணை மீன்களில் சோடியம் மிகவும் குறைவு. அதேபோல, கடல் மீன்களில் உள்ள கால்சியம், மற்ற மீன்களில் இருப்பதில்லை..
அந்தவகையில், இந்த மீன்களில் மட்டுமே கால்சியம் அதிகமாக உள்ளது என்று சொல்வதற்கில்லை.. எல்லா வகையான மீன்களிலும் கால்சியம் உள்ளது. எனினும், 3 வகையான மீன்களில் சற்று கூடுதல் கால்சியம் உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, சால்மன் மீன்களை சொல்லலாம்.. தலைமுடி, தோல், மூட்டுகள், மூளை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த சால்மன் வகை மீன் உதவுகிறது..
கால்சியம்: அதேசமயம், வைட்டமின், தாதுக்கள், ஒமேகா 3 போன்றவற்றுடன் கால்சியம் சத்தும் இந்த சால்மன் மீனில் அதிகமாக உள்ளதாம்.. அதாவது சால்மீனில் மட்டும் 340 மிகி கால்சியம் இருக்கிறது என்கிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக கெண்டை மீன்கள் எனப்படும் ஜிலேபி மீன்களை சொல்லலாம். சால்மன் மீன்களுக்கு அடுத்தபடியாக, இதில், மீனிலும் கால்சியம்அதிகமுள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. ஜிலேபியை உணவில் எடுத்து கொள்வதால், புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களும் குறைக்கப்படுகின்றன..
சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது. இதில், முரல் மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.. ராமநாதபுரம் மாவட்டத்தில், கரைவலையில் முரல் மீன்கள் முட்டிக் கொண்டு வந்தாலே மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள்.. அந்த அளவுக்கு அரிதான மீனாகும்..
பற்கள், எலும்புகள்: இதில், வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளன.. ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், இந்த முரால் மீனும் ஒன்று. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள், பற்களுக்கு உறுதிதரக்கூடியது
இந்த மீன்கள் எல்லாம் இருந்தாலும்கூட, மீன் முள்ளுகள் அல்லது மீன் எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறதாம்.. இதில், 50 கிராம் சார்டின் உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications