பாமாயில் வாங்கிட்டீங்களா.. இதய நோய் முதல் முகச்சுருக்கம் வரை விரட்டும் எண்ணெய் இதுதான்.. விடாதீங்க
சென்னை: உடல்நலம் பராமரிப்பில் எண்ணெய்களுக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. அந்தவகையில் கடலை எண்ணெய் மற்றும் பாமாயில் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போம்.
வேர்க்கடலை செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுதுதான், இந்த கடலை எண்ணெய்.. சமீபத்தில் நடந்த அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டிருந்த கருத்தில், இதயத்திற்கு இந்த கடலை எண்ணெய் நன்மை செய்வதாக கூறியிருந்தது. அதாவது, இதய நோய் அபாயத்தை 30 சதவிகிதம் இந்த கடலை எண்ணெய் குறைக்கிறதாம்.

அபாயம்: எனினும், 1 ஸ்பூன் கடலை எண்ணெயில், 120 கலோரிகள் இருக்கிறதாம்.. அதனால், கடலை எண்ணெய் ஊற்றி சமைத்தால், 2 ஸ்பூன்களுக்கு மேல் சமைக்கக்கூடாது என்கிறார்கள்..
நேரடியாக 1 ஸ்பூன்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யே நல்லது.. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. அளவாக உட்கொண்டாலே, இதய நோய் அபாயம் குறையும் என்கிறார்கள். ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயில் வைட்டமின் E மட்டும் 11 சதவீதம் இருக்கிறதாம்..
கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு நிறைந்திருப்பதால், சீரான ரத்த ஓட்டத்தை செயல்படுத்த உதவுகிறது.. அத்துடன், நரம்புகள், ரத்த நாளங்களில் அடைப்புகள் எதுவும் ஏற்படாதவாறு, அவைகளை சிறப்பாக செயல்பட வைத்து பராமரிக்கிறது.. ரத்த அழுத்தம் பிரச்சனைகளையும் இந்த கடலை எண்ணெய் தடுக்கிறது.
முக சுருக்கம்: இந்த வைட்டமின் E சத்துதான், முக சுருக்கத்தை தடுக்கின்றன.. வயதான தோற்றத்தை தள்ளி போடுகின்றன.. மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.. நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்குகின்றன.. செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கு பாதிப்புள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த கடலை எண்ணெய் உணவை சாப்பிடலாம். அதேபோல, கடலை எண்ணெய்யை பயன்படுத்துவதால் ரத்த சோகை பாதிப்பும் நீங்குகிறது.
பாமாயிலை எடுத்து கொண்டால், பீட்டா கரோட்டின் நிறைய உள்ளது.. இந்த பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதிலுள்ள வைட்டமின் A, கண்பார்வையை மேம்படுத்துகிறது.. கண் குறைபாடுகளை போக்குகிறது.. ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் பாமாயிலை பயன்படுத்தலாம்.
சரும நலன்: இதிலுள்ள வைட்டமின் E, உடலுக்கு இளமை தோற்றத்தை தருகிறது.. முகத்திலுள்ள சுருக்கத்தையும் போக்குகிறது.. மிகச்சிறந்த ஆன்டி ஆன்ஸிடண்டாக இந்த எண்ணெய் பயன்படுகிறது. அதேபோல, வைட்டமின் A சத்து குறைபாடு உள்ளவர்கள், பாமாயிலை பயன்படுத்தி வரலாம். இதனால், வைட்டமின் A கிடைத்துவிடுவதுடன், அதிகமாக தலைமுடி கொட்டுவதும் நின்றுவிடும்.. தலைமுடி பலம் பெறும்.
ஆனால் இத்தனை நன்மைகள் இருந்தாலும், பாமாயிலில் யார் பயன்படுத்தலாம் என்பதைவிட, யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற லிஸ்ட் மிகப்பெரியது..
கொழுப்பு சத்து: பாமாயிலில் அதிகமான கொழுப்பு உள்ளன.. இது பல நோய்களை உண்டுபண்ணிவிடும்.. அதேபோல, நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலை தந்துவிடும். எனவே, சமைக்காத பாமாயிலைவிட, சமைத்த பாமாயில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யுமாம். எனவே, கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருந்தாலோ, பாமாயிலை தவிர்த்துவிட வேண்டும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பாமாயிலை மறந்தே விடலாம்.. இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு, உடல் எடையை இன்னும் அதிகரிக்க செய்துவிடும். 100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும்... மேலும் இந்த பாமாயில் உடலில் பித்தத்தை அதிகரிக்க செய்துவிடும். சிலருக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அலர்ஜியை தந்துவிடும்.
தவிர்க்கலாம்: வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயில் உள்ள கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சேர்த்து சாப்பிடக்கூடாது.. ஆக, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு சத்து உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இவர்கள் பாமாயிலை தவிர்ப்பது நல்லது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications