Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரட்டைக்கீரை.. சர் சர்ருன்னு வெயிட் குறைக்கும் ஆச்சரிய சூப்கள்.. பொன்னாவரை கீரையின் அட்டகாசமான நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், 2 வகையான கீரை சூப்களை பயன்படுத்தினாலே, பெரும் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அது என்ன சூப்கள்?

உடல் எடையை குறைக்க, முருங்கைக்கீரையைவிட பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை.. ரத்த சோகை பிரச்சனை தீர்ப்பது முதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது வரை, இந்த முருங்கைக்கீரையில் இல்லாத விஷயமே இல்லை.

Do you know Health Benefits of Parattai Keerai and Ponnavarai Keerai is the Best food for Weight Loss

பரட்டைக்கீரை: இந்த கீரைக்கு அடுத்தபடியாக, உடலிலுள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது பரட்டைக்கீரை எனலாம்.. இலைகள் நீளமாகவும், அகலமாகவும், மிருதுவாகவும் இருந்தாலும், சுருட்டை வடிவிலேயே காணப்படும். அதனால்தான், இதற்கு பரட்டைக்கீரை என்று பெயர் வந்ததாம்.

கசப்பு அதிகம் என்பதால், இந்த கீரையை, நிறைய பேர் விரும்புவதில்லை. எனினும், சிறந்த சத்துக்கள் இந்த கீரையில் நிரம்பி உள்ளதால், வெளிநாட்டினர் அதிகம் உபயோகிக்கும் கீரையாக இது திகழ்ந்து வருகிறது. ஒரு கப் பரட்டைக்கீரையில், K, A, C, B1, B2, B3, B6 வைட்டமின்கள், கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் ஏகப்பட்டவை நிரம்பி உள்ளன..

கெட்ட கொழுப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.. காரணம், நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைப்பதில், பரட்டைக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது... நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், இந்த கீரையில் அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடக்கிறது.. மலச்சிக்கலும் தீர்க்கிறது.

Do you know Health Benefits of Parattai Keerai and Ponnavarai Keerai is the Best food for Weight Loss

ரத்தத்தில் சர்க்கரை அளவை இந்த கீரை சீராக வைத்திருக்க உதவுகிறது.. இந்த இந்த கீரையின் சாறு எடுத்து அதனை குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், இருதயத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. கலோரிகள் குறைந்த இந்த கீரையை ஜூஸ் போல செய்து சாப்பிடலாம் அல்லது குக்கரில் வேக வைத்து, சூப் போலவும் செய்து குடிக்கலாம். அல்லது சாலட்களிலும் சேர்க்கலாம்..

பொன்னாவரை: அடுத்ததாக பொன்னாவரை கீரையை குறிப்பிட்டு சொல்லலாம். உடலிலுள்ள கழிவுகளை நீக்கி, உடலை பொன்னை போல பேணிக்காக்க கூடியது என்பதால், இந்த பெயர் வந்ததாம்.

உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், குடல் புழுக்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றிவிடுவதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பொன்னாவரை, பெரிதும் கைகொடுக்கிறது.

வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதை குறைய துவங்கும். மற்ற கீரைகளை போலவே கடைந்து சாப்பிடலாம். ஆனால், 2, 3 முறை மலம் கழிக்க நேரிடும் என்றாலும், உடலிலுள்ள கெட்ட நீர், கழிவுகள் வெளியேறிவிடுமாம்.

பெஸ்ட் சூப்: பொன்னாவரையில் சூப் செய்யலாம். இந்த கீரையை கழுவி சுத்தம் செய்து, சின்ன வெங்காயம், உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம்.. ஆனால், இந்த சூப் குடித்தால், 1 மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. அதேபோல, இந்த கீரையை எப்படி சாப்பிட்டாலும் வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.. கர்ப்பிணிகள், குடல் புண், குடல் அழற்சி இருப்பவர்கள் இந்த கீரையை தவிர்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+