வெறும் "இது" மட்டுமே போதுமே.. தொங்கும் தொப்பை கரைஞ்சிடுமாம்.. சர்க்கரை நோயாளிகள் உடனே நோட் பண்ணுங்க
சென்னை: சில பழங்களை சாப்பிட்டால், ஜலதோஷம் பிடித்து கொள்ளும் என்பார்கள்.. ஆனால், ஜலதோஷத்தையே தீர்க்கக்கூடிய ஒரு பழம் இருக்கிறதென்றால், அதுதான் அன்னாசி பழம் எனப்படும் பைனாப்பிள்.
ஒரு கப் அன்னாசி பழத்தில் மட்டும், 82.5 கலோரிகள் இருக்கிறதாம்.. விட்டமின்C மட்டுமே 131 சதவீதம் உள்ளதாம்.. இதைத்தவிர, கொழுப்பு, புரோட்டீன், நார்ச்சத்து, மாங்கனீஸ், விட்டமின் B6, கார்போர்ஹைட்ரேட், காப்பர், பொட்டாசியம், என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன..

முக்கியமாக இதிலள்ள நார்ச்சத்துக்கள்தான், பெரும் நன்மையை நமக்கு தருகிறது.. இதனால், இதயங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.. ரத்த தட்டுக்களிலும், இதய வால்வுகளிலும் கொழுப்புகள் படியாமல் இருக்க இந்த அன்னாசி பேருதவி புரிகிறது.
2 தீர்வுகள்: அன்னாசிப்பழம் 2 வகையான பிரச்சனைகளை சரி செய்கிறது.. ஒன்று ஜலதோஷம், மற்றொன்று மூட்டு தேய்மான பிரச்சனைகளாகும்.. அன்னாசிபழத்தில், புரோமலைன் என்ற சத்துக்களும், நிறைய ஆன்டி ஆக்ஸிடன்களும் உள்ளதால், சுவாச அழற்சியை நீக்குகிறது.. ஜலதோஷத்தையும் குணப்படுத்துகிறதாம்..
சுவாச பாதையில் தேங்கி இருக்கும் சளியை இளக்கி வெளியேற்றுவதில், அன்னாசிக்கு பெரும்பங்கு உண்டு.. இந்த புரோமலைன்தான், ஆஸ்துமாவையும் குறைக்க உதவுகிறதாம். அதனால்தான், இருமலையும் இந்த பழம் குணப்படுத்துமா? என்ற ஆராய்ச்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.
மூட்டுவலிகள்: தொப்பையை குறைக்க நினைப்போருக்கும், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும் பெஸ்ட் பழம் இதுவாகும்.. அதாவது, ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தால், தொப்பை கறைந்துவிடுமாம்.
இறைச்சி வகைகளை சாப்பிட்டபிறகு, அரை மணிநேரம் கழித்து, சிறிது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதச்சத்து முழுவதும் ஊறச்செய்து, செரிமானம் ஆகிவிடும்.. அன்னாசிப்பழ ஜூஸில் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

அன்னாசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பி உள்ளதால், மூட்டுவலிகளில் ஏற்படும் வீக்கம் குறைகிறது.. அத்துடன் மூட்டுகளும் வலுவாகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை போக்கவும் இந்த பழம் துணைபுரிகிறது. அதேபோல ரத்தக்கட்டிகளை தடுக்கவும் இந்த பழம் உதவுகிறது..
உடலின் காயங்கள்: இந்த பழத்தில் ப்ரோமெலைன் இருப்பதால், தேய்மான பிரச்சனையை தீர்க்க பேருதவி புரிகிறது.. உடலில் காயங்களையும் விரைவில் ஆற்றுகிறது.. நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் தீர்வதுடன், குடல் பாதுகாப்புக்கும் நன்மை கிடைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களில் இந்த அன்னாசியும் ஒன்றாகும்.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் எதுவானாலும் கெடுதிதானே? இந்த பழத்தை நிறைய சாப்பிட்டால், பற்களில் கறை உண்டாகிவிடுமாம்.. பற்குழி, ஈறு அழற்சிகளை உண்டுபண்ணிவிடக்கூடும்.. அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக கழுவி இந்த பழத்தை சாப்பிட வேண்டுமாம்.. நன்றாக பழுக்க வைத்த பிறகே, இந்த அன்னாசியை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
அதிக அளவு பைன்ஆப்பிள் சாப்பிட்டால், சிறுநீரக பாதிப்பும் வரலாம்.. நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்று உப்புசம், போன்ற உபாதைகளும் வரக்கூடும்.. நிறைய குளுக்கோஸ், சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், இந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாது.. இன்சுலின் அளவை அதிகரித்துவிடுமாம்.
அளவுக்கு மிஞ்சினால்: வாத பிரச்சனை உள்ளவர்கள் அதாவது, கீல்வாதம், மற்றும் முடக்கு வாதம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், வலிப்பு நோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது. வைட்டமின் சி நிறைய உள்ள பழம் என்றாலும், அளவோடு எடுத்து கொள்வதே நல்லது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications