ஒல்லி ஒல்லின்னு இருக்கீங்களா.. அப்ப "இதை" மட்டும் சாப்பிடுங்க.. வலுவாக்கும் எள்ளுருண்டை + ஆட்டுக்கறி
சென்னை: சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது.. மெலிந்த உடலுடன் காணப்படுவார்கள்.. இதுபோன்றவர்களுக்கு எளிய முறையிலேயே வீட்டில் உணவு தயாரித்து தந்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை கூட வாய்ப்புள்ளது.
உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், முதலில் ஆரோக்கியமில்லாத சாப்பாட்டை நிறுத்த வேண்டும்.. ஆரோக்கியமற்ற உணவுகள்தான் உடல் எடை கூடாததற்கு முக்கிய காரணமாகும்.

ஊட்டச்சத்துக்கள் + புரோட்டீன் + கார்போஹைட்ரேட் + கொழுப்புகள் இப்படி எல்லாமே உடலுக்கு கிடைக்க வேண்டும்.. சாக்லேட், சீஸ் அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளே இதற்கு முதலில் தேவையாக உள்ளது..
எள்ளுருண்டை: இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழி உள்ளதால், எள்ளுச்சட்னி, எள்ளுத்துவையல், எள் உருண்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்... இதில் வெல்லம் சேர்த்து இந்த உருண்டையை தயாரிக்கும்போது, சத்துக்கள் டபுள் மடங்காகும்.. எள்ளை லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்னும்பாதியாக அரைத்து, வெல்லத்தையும், ஏலக்காயையும், பொடித்து போட்டு, நெய் கலந்து உருண்டையாக பிடித்தால் எள் உருண்டை ரெடி.
இதுபோலவே, வெல்லம் சேர்த்து கருப்பு உளுந்துவில் அல்வா போல கிண்டி தரலாம். அல்லது கேழ்வரகு மாவில் ராகி மால்ட் போல செய்து தரலாம்.. அதாவது, கேழ்வரகு மாவை சலித்து எடுத்து, அதனுடன் நாட்டுச்சர்க்கரை, பசும்பால், சிறிது நெய் சேர்த்து கஞ்சி போல காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை கூடும்.. அல்லது வெல்லம் சேர்த்த வேர்க்கடலை உருண்டையை சாப்பிடலாம்.
வெண்ணெய்: பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, வேர்கடலை, வெண்ணெய், பால், ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், போன்ற கொழுப்பு நிறைந்தவற்றையும் உணவில் குறைந்த அளவு சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டு வரலாம்.. இரும்பு சத்து நிறைந்த உலர் திராட்சையும், உடல் எடை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன..
மட்டன், சிக்கன், மீன், முட்டை, சோயா என தினமும் சாப்பிட்டு வருவதால், உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும். ஓட்ஸ் மீல், தானியங்களி நிறைய கார்போஹைட்ரேட் உள்ளது..
மாம்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களையும், ப்ரோக்கோலி, கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும், கொண்டைக்கடலை போன்ற தானியங்களையும் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. செவ்வாழை பழம், நேந்திரம்பழம் சாப்பிடலாம்.
பச்சை வாழைப்பழம்: தயிர் மற்றும் பால் இவைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.. அதேபோல, சுடுசோறில், பருப்பு மசியல், சிறிது பசுநெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை கூடும்.. இரவில் ஒரு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பசும்பால் குடித்து வந்தாலும் உடல் எடை கூடும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications