தொங்குதா ஊளைச்சதை.. இந்த "2 டீயை" போட்டு குடிங்க.. கடகடன்னு உடல் எடை குறையுதாமே.. சூப்பர் டிப்ஸ்கள்
சென்னை: ரோஜா பூவை பொறுத்தவரை வாசனையும், அழகும் மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சேர்த்தே அடக்கி வைத்திருக்கிறது.. நிறைய உடல் உபாதைகளை இந்த இதழ்கள் தீர்க்கின்றன
இந்த ரோஜாவிலிருந்து ஒருவித தைலம் எடுக்கப்படுகிறது. இது காதுவலி, காது குத்தல், காதுப்புண்களை குணமாக்கக்கூடியது... ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் சர்பத், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால், மூலச்சூடு, குடலில் புண் போன்றவை மெல்ல ஆறிவிடும்.. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்...

மலச்சிக்கல்: மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ரோஜா இதழ்கள் மிகச்சிறந்த தீர்வு.. இந்த இதழ்களை, சிறிது அள்ளி பாத்திரத்தில் போட்டு, 2 டம்ளர் தண்ணீரை ஒரு டம்பளர் வரும்வரை கொதிக்கவைத்து, வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.. மேலும், குமட்டல், வாந்தி, அஜீரண கோளாறுகளுக்கும் இந்த நீர் மிகவும் நல்லது.
ஆனால், உடல் எடையை குறைப்பதிலும் ரோஜாஇதழ்கள் முக்கிய பங்காற்றகின்றன.. இந்த இதழ்களைவைத்து, டீ தயாரித்து குடித்தால், நிச்சயம் பல பலன்களை பெற்று தரும் என்கின்றன ஆய்வுகள்.
ரோஜா இதழ்கள்: ரோஜா இதழ்களை வெயிலில் உலர வைத்து, எடுத்து வைத்துக்கொண்டால், டீ போட பயன்படும். ரோஜா இதழ்கள் 15 அல்லது 20 எண்ணிக்கை எடுத்துக் கொண்டு, அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.. இப்போது தண்ணீரின் கலர் சிவப்பாக மாறிவிடும்.. இதை அப்படியே வடிகட்டி குடிக்கலாம். அல்லது, இதிலேயே டீத்தூள் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலால் ஆனால், இனிப்பு எதையும் சேர்க்காமல் குடித்தால், உடல் எடை குறைவதில் பலன் கிடைக்கும்.
இதை தினமும் குடித்து வந்தால், உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் நீங்கும்.. சருமப்பாதுகாப்புக்கும் நல்லது.. தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது.. ரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தமும் நீங்கும்.. சீரான எடையையும் காத்துக் கொள்ள முடியும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். பெண்களுக்கு மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
வெல்லம் டீ: அதேபோல, உடல் எடை குறைவதில் வெல்லம் மிகப்பெரிய அளவுக்கு துணை புரிகிறது.. காரணம், வெல்லத்தில் வைட்டமின் A, B, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் எலக்ட்ரோலைட், உடல் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலில் தேங்கும் கொழுப்பை குறைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது. இதில், டீ போட்டு குடிக்கலாம்.. வழக்கமாக, பால் சேர்த்து டீ போடும்போது, வெல்லம் சேர்ப்பார்கள் என்றாலும், பால் இல்லாமலேயே இந்த டீ போடலாம்.
வெல்லம் டீ: ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி, இஞ்சி, ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் மிளகு பொடி, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இறுதியில் வெல்லத்தை சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் மசாலா டீ ரெடி.. மதிய உணவுப்பிறகு, அல்லது வெறும் வயிற்றில்கூட இந்த டீயை குடிக்கலாம்.












Click it and Unblock the Notifications