Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்டுக்கீரை செய்றீங்களா.. அதென்ன வெள்ளை கலரில் விதைகள்.. அள்ளி அள்ளி நன்மையை தரும் அமராந்தி.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரை விதைகள் என்றாலே பெரும்பாலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கக்கூடியது என்கின்ற ஆய்வுகள். அதில் ஒன்றுதான் தண்டுக்கீரையின் விதைகள்.
முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை.. இந்த தண்டுக்கீரையில் 2 வகைகள் ஒன்று, ஒன்று பச்சையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறமாக இருக்கும்.. அதனால், இந்த கீரையை சிலர் சிவப்பு கீரை என்றும் சொல்வார்கள்.. சிவப்பு நிற கீரை தண்டு, இதில் சிவப்பு நிற தண்டுக்கீரை சத்தும், ருசியும் அதிகமுள்ளதாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை குணமாக்குகிறது.

சத்துக்கள்: தண்டுக்கீரையை பொறுத்தவரை எல்லா சத்துக்களுமே இதில் நிறைந்துள்ளன.. வைட்டமின் A, B, C, கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், சோடியம், தையமின், கொழுப்புச்சத்து என அத்தனையும் நிறைந்திருக்கின்றன.. அதனால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரையாக இந்த தண்டுக்கீரை உள்ளது.

Do you know Health Benefits of Thandu Keerai and what are the Excellent Uses of Amaranth Seeds

இந்த கீரையை பெண்களுக்கு மிகவும் நல்லது.. கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைக்கும் தன்மை இந்த தண்டுக்கீரைக்கு உண்டு. கல்யாணம் ஆகி பல வருடங்களாகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலைமை இருக்கும்.. அதுபோன்ற பெண்கள் தங்கள் இந்த தண்டு கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து கொண்டால், கருப்பை பலம் பெறும்... கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள், தொற்றுக்கள் வெளியேறுவதுடன், கருத்தரிக்கும் நிலைமையும் ஏற்படும்.

உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளுக்கு மிகவும் உபயோகமானது இந்த கீரை.. கல்லீரல், சிறுநீரகம், குடல் என அனைத்து முக்கிய பாகங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த கீரை சீர்செய்கிறது.. குறிப்பாக, அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும்.. இதனால், வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் மெல்ல ஆறிவிடும்.. அத்துடன், மலச்சிக்கலும் தீரும்..

முக்கியமாக, புற்றுநோய்களிலேயே மிக மோசமான, வயிற்றுப்புற்றுநோய் பாதிப்பை தடுப்பதில் பெரும்பங்கு இந்த தண்டுக்கரைக்கு உண்டு. அதேபோல, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள், இந்த தண்டுக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் படியும் கற்கள் கரைந்துவிடும்.. நச்சுக்கள் வெளியேறும்..

விதைகள்: இந்த தண்டுக்கீரை மட்டுமல்ல, அதன் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தது.. இந்த விதையை ஆங்கிலத்தில் அமராந்த் என்பார்கள்.. அமராந்தில் ஏகப்பட்ட புரோட்டீன்களும், நார்ச்சத்தும் உள்ளதால், பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.. ஒரு கப் கீரை 26 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம். அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

இதய ஆரோக்கியம்: நரைமுடிகளை போக்க உதவுகிறது. ரத்த சர்க்கரை அளசை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.. தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது.. இதனால், எலும்புகள் உறுதிப்படும்.. பார்வை கூர்மைப்படும்.. நீரிழிவு நோயும் கட்டுப்படும். மலச்சிக்கல், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து பாதுகாக்க, இந்த அமராந்த் விதைகள் உதவுகின்றன..

மாரடைப்பு, பக்கவாத ஆபத்தை போக்குகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் அதன் பங்களிப்பை தருகிறது.

அதனால், நீரிழிவு நோயாளிகள் இந்த விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.. தண்டுக்கீரையின் விதையில் குளூட்டன் என்ற புரதம் இல்லை என்பதால், குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாகவே சாப்பிடலாம்..

எப்படி பயன்படுத்துவது: பெரும்பாலும், இந்த வெள்ளை விதையை கடைந்து, பாலில் கலந்து குடிப்பார்கள்.. சத்தான உணவுகளிலும் கலந்து சாப்பிட்டால், கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.. இதை கட்லெட் ஆகவும் செய்து சாப்பிடலாம்.. இந்த விதைகளை அரிசியுடன் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. வால்நட்ஸ், பாதாம், உட்பட பல காய்கறிகளுடன் சாலட் செய்யும்போதும், இந்த விதையை பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இந்த கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். சென்னை: கீரை விதைகள் என்றாலே பெரும்பாலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கக்கூடியது என்கின்ற ஆய்வுகள். அதில் ஒன்றுதான் தண்டுக்கீரையின் விதைகள்.
முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை.. இந்த தண்டுக்கீரையில் 2 வகைகள் ஒன்று, ஒன்று பச்சையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறமாக இருக்கும்.. அதனால், இந்த கீரையை சிலர் சிவப்பு கீரை என்றும் சொல்வார்கள்.. சிவப்பு நிற கீரை தண்டு, இதில் சிவப்பு நிற தண்டுக்கீரை சத்தும், ருசியும் அதிகமுள்ளதாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை குணமாக்குகிறது.

சத்துக்கள்: தண்டுக்கீரையை பொறுத்தவரை எல்லா சத்துக்களுமே இதில் நிறைந்துள்ளன.. வைட்டமின் A, B, C, கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், சோடியம், தையமின், கொழுப்புச்சத்து என அத்தனையும் நிறைந்திருக்கின்றன.. அதனால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரையாக இந்த தண்டுக்கீரை உள்ளது.

இந்த கீரையை பெண்களுக்கு மிகவும் நல்லது.. கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைக்கும் தன்மை இந்த தண்டுக்கீரைக்கு உண்டு. கல்யாணம் ஆகி பல வருடங்களாகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலைமை இருக்கும்.. அதுபோன்ற பெண்கள் தங்கள் இந்த தண்டு கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து கொண்டால், கருப்பை பலம் பெறும்... கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள், தொற்றுக்கள் வெளியேறுவதுடன், கருத்தரிக்கும் நிலைமையும் ஏற்படும்.

உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளுக்கு மிகவும் உபயோகமானது இந்த கீரை.. கல்லீரல், சிறுநீரகம், குடல் என அனைத்து முக்கிய பாகங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த கீரை சீர்செய்கிறது.. குறிப்பாக, அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும்.. இதனால், வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் மெல்ல ஆறிவிடும்.. அத்துடன், மலச்சிக்கலும் தீரும்..

முக்கியமாக, புற்றுநோய்களிலேயே மிக மோசமான, வயிற்றுப்புற்றுநோய் பாதிப்பை தடுப்பதில் பெரும்பங்கு இந்த தண்டுக்கரைக்கு உண்டு. அதேபோல, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள், இந்த தண்டுக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் படியும் கற்கள் கரைந்துவிடும்.. நச்சுக்கள் வெளியேறும்..

விதைகள்: இந்த தண்டுக்கீரை மட்டுமல்ல, அதன் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தது.. இந்த விதையை ஆங்கிலத்தில் அமராந்த் என்பார்கள்.. அமராந்தில் ஏகப்பட்ட புரோட்டீன்களும், நார்ச்சத்தும் உள்ளதால், பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.. ஒரு கப் கீரை 26 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம். அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

இதய ஆரோக்கியம்: நரைமுடிகளை போக்க உதவுகிறது. ரத்த சர்க்கரை அளசை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.. தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது.. இதனால், எலும்புகள் உறுதிப்படும்.. பார்வை கூர்மைப்படும்.. நீரிழிவு நோயும் கட்டுப்படும். மலச்சிக்கல், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து பாதுகாக்க, இந்த அமராந்த் விதைகள் உதவுகின்றன..

மாரடைப்பு, பக்கவாத ஆபத்தை போக்குகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் அதன் பங்களிப்பை தருகிறது.

அதனால், நீரிழிவு நோயாளிகள் இந்த விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.. தண்டுக்கீரையின் விதையில் குளூட்டன் என்ற புரதம் இல்லை என்பதால், குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாகவே சாப்பிடலாம்..

எப்படி பயன்படுத்துவது: பெரும்பாலும், இந்த வெள்ளை விதையை கடைந்து, பாலில் கலந்து குடிப்பார்கள்.. சத்தான உணவுகளிலும் கலந்து சாப்பிட்டால், கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.. இதை கட்லெட் ஆகவும் செய்து சாப்பிடலாம்.. இந்த விதைகளை அரிசியுடன் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. வால்நட்ஸ், பாதாம், உட்பட பல காய்கறிகளுடன் சாலட் செய்யும்போதும், இந்த விதையை பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இந்த கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+