அன்னாசி பழம்.. அண்ணாந்து பார்க்க வைக்கும் அன்னாசி..உடல் எடை குறைய பெஸ்ட் சாய்ஸ்.. இப்படி சாப்பிடுங்க
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது அன்னாசி பழம்.. எப்படி தெரியுமா?
அன்னாசி பழத்தின் நன்மைகளை பட்டியலிட்டு சொல்ல முடியாது.. ஜீரணி சக்தி முதல் புற்றுநோய் அபாயத்தை தடுப்பதுவரை இந்த பழத்துக்கு நிறைய பங்கு உள்ளது.
அடிக்கடி ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி, விக்கல், மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், மூட்டு வலி குணமாக, பற்கள், எலும்புகளுக்கு பலம் கிடைக்கு, கண் பார்வை தெளிவடைய, பித்தம் நீங்க, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோயை போக்க, தொண்டை கரகரப்பு சரியாக, தொண்டை அழற்சி விலக, பித்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாக, அனைத்துக்குமே அன்னாசிப்பழ வற்றல் தீர்வு தருகிறது.

பூச்சிகள்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், அன்னாசிப்பழ இலையை அரைத்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்தாலே போதும்.. பூச்சிகள் வெளியேறிவிடும்.. ஆனால், உடல் எடையை குறைப்பதில் அதிக பங்கு இந்த பழத்துக்கு உள்ளது.
காரணம், அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், நிறைய நார்ச்சத்தும் உள்ளதுதான், குறைவான கொழுப்புச்சத்தும், இதன் தனிச்சிறப்பாகும்.. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க தூண்டுகிறது.. இதனால், உணவின் ஜீரணமும் எளிதாகுகிறது.. உங்கள் செரிமான அமைப்பும் ஆரோக்கியமானதாக மாறுகிறது.
நீர்ச்சத்துக்கள்: அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவை குறைப்பதில் சிறந்து செயல்படுகிறது.. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது... இதனால் நச்சுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம் உடல் எடையும் குறைய துவங்குகிறது.
அதுமட்டுமல்ல, அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன..ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, அன்னாசியை கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலே, தொப்பை கறைய துவங்கும்.. உடல் எடையிலும் மாற்றம் காணலாம் என்கிறார்கள்.
அன்னாசி டீ: அல்லது, அன்னாசியில் டீ தயாரித்து குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சிறிது டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் அன்னாசி பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் இரண்டையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் போதும். அவ்வப்போது இதை குடித்துவரும்போது, எடை இழப்பு வேகமாக ஏற்படும்.
அல்லது, ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 4 ஸ்பூன் ஓமம் பொடி மற்றும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசி பழத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். இதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில், வடிகட்டி சாறு மட்டும் குடித்தால் போதும். 10 நாட்கள் தொடர்ந்து இப்படி குடித்து வந்தாலே, உடல் எடை குறைய துவங்கும்.
அன்னாசி ரசம்: அல்லது, எந்த ரசம் வைத்தாலும், அதில், சில துண்டுகள் அன்னாசியை சேர்த்து கொண்டாலும் போதும். மிளகு, சீரகம், பூண்டு, + அன்னாசியுடன் தயாராகும் இந்த ரசம், உடல் எடையை சீக்கிரத்தில் குறைத்துவிடுமாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications