ஆஃப் பாயில் சாப்பிட்டால் டைஃபாய்டு காய்ச்சல் வருமா? ஒரு முட்டையில் இத்தனை பிரச்சினைகளா?
சென்னை: முட்டையை உண்பதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் அதையே அரைக்குறையாக வேக வைத்தால் அது உடல்நலனுக்கே கேடாக முடியும் என்கிறார்கள்.
முட்டை.. புரதச் சத்து அதிகம் காணப்படும் உணவு. இந்த முட்டையை ஏழை குழந்தைகளும் பெற்று ஊட்டச்சத்தை பெற சத்துணவுகளில் முட்டை பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்த முட்டையில் லுடீன் எனும் மூலப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இது எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். மேலும் ஓமேகா 3யும் முட்டையில் இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன. முட்டைகள் எலும்பை பலப்படுத்தும் தன்மை கொண்டது. முட்டையை தினசரி சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதிலும் வேக வைத்த முட்டையே உடல் நலனுக்கு நல்லது என்றும் கூறுகிறார்கள். சிலருக்கு மஞ்சள் கருவை சாப்பிடுவதா வேண்டாமா என்ற சந்தேகம் இருக்கும். மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புக்கும் பற்களுக்கும் வலு சேர்க்கும். மஞ்சள் கருவில் கொழுப்பு சத்து இருக்கும் என்பதால் சிலர் அதை தவிர்ப்பார்கள்.
இதில் கார்போஹைட்ரேட் இல்லை. புரதமும் கொழுப்பு சத்தும்தான் இருக்கின்றன. இந்த மஞ்சள் கருவில் அமினோ அமிலங்கள் உள்ளன. இத்தனை நன்மைகளை செய்யும் முட்டை சில கெடுதல்களையும் வரவழைக்கிறது. அதாவது எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை அரைகுறையாக வேக வைத்து சாப்பிடக் கூடாது.
அதிலும் முட்டை, மாமிசங்கள் உள்ளிட்டவைகளை அரைக்குறையாக வேகவைத்து சாப்பிடுவது உடல்நலனுக்கு நன்மை இல்லை என்கிறார்கள். முட்டையை வேக வைத்து சாப்பிட்டாலும் இதில் ஆம்லெட், ஆஃப்பாயில், கலக்கி உள்ளிட்ட உணவு பொருட்களை செய்து சாப்பிடுகிறார்கள்.
அதில் கலக்கி மற்றும் ஆஃப் பாயில் சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை என்கிறார்கள். இந்த இரு உணவு பொருட்களிலும் முட்டையின் மஞ்சள் கரு ஆடும். இதில் சால்மொனெல்லா எனும் பாக்டீரியா உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்த பாக்டீரியா அரை குறையாக வேக வைக்கப்படும் உணவு பொருட்களில் உருவாகும். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் அசதி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும்.

மேலும் இந்த சால்மொனெல்லா பாக்டீரியா எது என தெரியுமா. இதுதான் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியா. எனவே கலக்கி, ஆஃப் பாயில் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிடுவது அந்த அளவுக்கு நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பாக்டீரியா பொதுவாக பச்சையாக சாப்பிடும் உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகள், முட்டை, முட்டை பொருட்கள், பதப்படுத்தப்படாத பால் உள்ளிட்டவற்றில் உருவாகும். மேலும் இது விலங்குகள், பறவைகளின் குடலில் வசிக்கும். இவை மனிதர்களுக்கு உணவு மூலம் பரவுகிறது.
முழுவதுமாக வேக வைத்தால் இந்த சால்மொனேல்லா பாக்டீரியாக்கள் இறந்துவிடும். இவை 145 டிகிரி முதல் 165டிகிரி பாரன்ஹீட் வரை கொதிக்க வைத்தால் மட்டுமே இறக்கும். இந்த பாக்டீரியா நம் உடலுக்குள் நுழைந்த 6 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தொடங்கிவிடும். அதாவது ரத்தத்துடன் கூடிய வயிற்றுபோக்கு, காய்ச்சல், வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்படும். எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை முழுவதுமாக சமைத்து சாப்பிட வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications