Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ரு சர்ருனு உடல் எடையை குறைக்கணுமா? தொங்கும் தொப்பையை கரைத்திடும் சூப்பர் டீ.. இஞ்சி இருக்கா? பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எவ்வளவுதான் முட்டிமோதினாலும் உடல் எடை குறையவில்லையா? வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே, எளிமையான முறையில், ஒரு சில டிப்ஸ்களை முயற்சித்து பார்க்கலாம் என்கிறார்கள்.

பச்சைக்காய்கறிகள், தானியங்கள், கீரைகள் என முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான அளவுக்கு தூக்கம், தண்ணீர் குடிப்பது, மனதை அமைதியாக வைத்து கொள்வது போன்றவையே உடல் எடை குறைப்பதற்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன.

Belly Fat Weight Loss Ginger

சூப்கள், சாறு: அதேசமயம், ஒருநாளில் நாம் பருகும் தண்ணீரும், உடல் எடை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.. வெறும் தண்ணீரை குடிப்பதுடன், சூப்கள், டீ, சாறு போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதுமாம்

உதாரணத்துக்கு மஞ்சள் டீ தயாரித்து குடிக்கலாம்.. உடலிலுள்ள கொழுப்பு கரையை கிரீன் டீ, பிளாக் டீயைவிட, மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் டீ குடிக்கலாம்.

கொழுப்பு: இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு, மஞ்சள், இஞ்சி, கருமிளகு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து, பிறகு தேன் கலந்து குடிக்கலாம். இதனால் கொழுப்பு கரைவதுடன், தொப்பையும் குறைய துவங்குமாம்.

வெந்தயத்திலும் டீ போட்டு குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1 துண்டு லவங்கப்பட்டை, 1 துண்டு இஞ்சி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி குடிக்கலாம். இதேபோல, சீரகத்திலும் டீ போட்டு குடிக்கலாம்.. இதனால், உடலிலுள்ள உஷ்ணம் நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

வெந்தயம்: அதேபோல, கால் டீஸ்பூன் வெந்தயம், கருஞ்சீரகம், 2 சிட்டிகை ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து 15 அல்லது 20 நாட்கள் குடித்து வந்தாலும் தொப்பை மெல்ல குறைய ஆரம்பிக்கும்.. எனினும், இதில் கருஞ்சீரகம் சேர்ப்பதால், இதை அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது..

பொட்டுக்கடலையில் சர்பத் கலந்து குடித்து வந்தால் தொந்தி குறைய துவங்குமாம்.. இதற்கு பொட்டுக்கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, சீரகப்பொடி 1 ஸ்பூன், துருவிய இஞ்சி கால் ஸ்பூன், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து சர்பத் போல தயாரித்து குடிக்க வேண்டும்.

இஞ்சி: வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, ஒரு சொம்பு தண்ணீரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா இலை, 2 ஸ்பூன் இஞ்சித்துருவல் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துவிட வேண்டும். பிறகு இந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், எடை குறைய துவங்கும்.

மதிய நேரத்தில், புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விழுதாக அரைத்து, அதனை மோரில் கலந்து குடிக்கலாம். வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது.. அவ்வளவு ஏன்? தினமும் பால் சேர்க்காமல் 2 கப் பிளாக் காபி குடித்தாலே உடல் எடை குறைகிறது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+