சூப்பர் டிப்ஸ்.. இதய நண்பன் "சிகப்பு மிளகாய்".. ஆயுளை கூட்டும் காரமான காய்ந்த மிளகாய்.. அம்மாடியோவ்
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன என்றாலும், மிளகாயும் அதில் ஒன்று என்பதுதான் ஆச்சரியமான தகவல். அந்தவகையில், சிகப்பு மிளகாயின் நன்மைகள் என்னென்னவென்று பார்ப்போம்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் மிளகாயில், பெரும்பாலும் நம்முடைய நாட்டிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலத்தில் மிளகாய் விளைச்சல் அதிகமாக நடக்கிறது.

நன்மைகள்: சிகப்பு மிளகாயை பொறுத்தவரை, பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.. இதனால், உணவின் சுவை + நிறம் கூடுகிறது.. சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.. மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக உதவுகிறது..
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது.. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட, நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள்.
சிகப்பு மிளகாய்: இந்த சிகப்பு மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சிகப்பு மிளகாயில் வைட்டமின் A, B, M, K, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. காப்சைசின் என்ற பொருள் இதில் அடங்கியுள்ளது.. மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமே இந்த ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகள்தான். ஆரஞ்சு பழத்தைவிட இந்த சிவப்பு மிளகாய் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளதாம்.. அரை கப் சிவப்பு மிளகாயில் 107.8 மிகி வைட்டமின் C இருக்கிறதாம்..
இந்த வைட்டமின் C சத்தானது, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.. நம்முடைய சருமத்துக்கு பாதுகாப்பை தருகின்றன.. கொலாஜன் உற்பத்தியையும் தூண்டுகிறது. சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.. அதில் சிகப்பு மிளகாயை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், ஆயுட்காலம் அதிகரிப்பதாக முடிவுகள் வந்துள்ளது..
இதயநோய்: இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மாரடைப்பு வந்த உடனேயே ஒரு டீஸ்பூன் சிகப்பு மிளகாய் தூளை, ஒரு டம்ள நீரில் கரைத்து குடித்தாலே தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்..
சிகப்பு மிளகாய் எடை குறைப்பில் பெரும்பங்கு வகிக்கிறது.. இதற்கு காரணம், சிவப்பு மிளகாயில் அடங்கியிருக்கும் கேப்சைசின், பசியை கட்டுப்படுத்தி, அதிக கொழுப்பு எரிக்க உதவுகிறது.. இதற்கும்கூட ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.. அந்த ஆய்வில் கலந்துகொண்ட 24 பேருக்கு, உணவிற்கு முன்பு காப்சைசின் தரப்பட்டதாம்.. இதனால், அவர்கள் குறைவான கலோரி சாப்பிட்டதாகவும், எடை இழப்புக்கு இது முக்கியமான காரணி என்றும் பார்க்கப்படுகிறது.
இறைச்சி: சிகப்பு மிளகாயை பொறுத்தவரை, இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி என்பதால், சாப்பாட்டில் ஏதாவது சிறிய நுண்ணயிரிகள் இருந்தாலும், இந்த மிளகாய் அவைகளை அழித்துவிடும். அதனால்தான், இறைச்சி உணவுகளில் சற்று தூக்கலாகவே, காரம் சேர்த்து சமைக்கிறார்கள்.
கடைகளில் மிளகாய் தூள் வாங்குவதைவிட, வீட்டிலேயே நாம் அரைத்து பயன்படுத்தினால், இன்னும் நல்லது.. குண்டு மிளகாய், அல்லது நீளமான மிளகாய் என எந்த மிளகாயாக இருந்தாலும், அதை தூள் செய்து கொள்ளலாம்..
வீட்டிலேயே அரைக்கலாம்: புதிய மிளகாய் என்றால், முதலில் அதை பழுக்க வைக்க வேண்டும்.. காரணம், அதிகப்படியான காரத்தன்மையை குறைப்பதற்காக அதனை வேக வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டிவிட்டு, வெறும் மிளகாயை நான்கைந்து நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
ஒருவேளை காரம் அதிகமாக சாப்பிடுபவர்களாக இருந்தால், அப்படியே வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளலாம்.. இந்த மிளகாயில், கறிவேப்பிலை, சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்துகொண்டால், நீண்ட காலம் பயன்படுத்தலாம், பூச்சிக்களும் நெருங்காது.












Click it and Unblock the Notifications