மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் சளி தொல்லையா? ஒரு ஸ்பூன் தேன்+ அரை ஸ்பூன் மிளகு தூள் போதுமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு அடிக்கடி சளி பிடித்தால் தினமும் மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிலருக்கு ஏசி காற்று ஆகாது, அதிகாலை அல்லது இரவு நேர காற்று அறவே ஒத்துக் கொள்ளாது என்பார்கள். அது போல் ஜூஸ், ஐஸ், தயிர், மோர், தர்பூசணி, பூசணிக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளை கூட சாப்பிட அச்சப்படுவார்கள்.

honey

இதற்கு காரணம் சளி, இருமல், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம்தான். இவற்றை சாப்பிடாமல் இருந்தாலும் சிலருக்கு அலர்ஜி, ஆஸ்துமாவால் காலையில் எழுந்ததும் தும்மல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல் உள்ளிட்டவை ஏற்படும்.

சளி ஜலதோஷம்

இருமல், சளி, ஜலதோஷம் போன்றவற்றை சரி செய்ய சில வீட்டுக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் மிகவும் எஃபெக்டிவ்வான ஒன்றுதான் மிளகுத் தூள், தேன் ஆகும். இவை இரண்டுக்குமே தனித்தனி மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே மிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டால் வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிளகுத் தூள்

இப்போது குளிர்காலத்தில் மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி சளி பிடிக்குமானால் இரவு தூங்க போவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் தேனில் அரை ஸ்பூன் மிளகுத் தூளை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

தேன் + மிளகு தூள்

இவற்றை சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்குள் சென்ற மிளகுத் தூளும் தேனும் சளியை கழிவுகள் வழியாகவோ மூக்கை சிந்துவதன் மூலமாகவோ வெளியேறும். அது போல் இந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.

நெய் சேர்த்து வறுக்கவும்

ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து பின்னர் அதில் மிளகை சேர்த்து வறுத்து நீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதை ஆற வைத்து அன்றைய நாளில் தேவைப்படும் போது குடிக்கலாம். சுவை ஒரு மாதிரிதான் இருக்கும், தேவைப்பட்டால் சீனியோ அல்லது நாட்டு சர்க்கரையோ போட்டுக் கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . இருமலும் தொண்டை கரகரப்பும் நீங்கும்.

சளி பிடிக்காது

சளியால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது, ஏற்கெனவே சாப்பிட்டதும் நெஞ்சில் நிற்பது போல் இருக்கும். அஜீரண கோளாறால் அவதிப்பட்டால் மிளகுத் தூளை தேனுடன் சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.

பாலில் மிளகுத் தூள்

பாலில் கூட மிளகுத் தூளை கலந்து பருகலாம். இது கொலஸ்ட்ராலை கூட கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இதனால் இதய நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சூடு ஆறியதும் தேன் கலந்து சாப்பிடலாம்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்

தேனும் மிளகும் சூட்டை கிளப்பக் கூடியவை. எனவே இதை பார்த்து அளவோடு பயன்படுத்துவது நல்லது. ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உண்ணவே கூடாது. இது உடலை சுத்திகரிக்கிறது. கல்லீரலில் படிந்திருக்கும் படிவங்களை வெளியேற்றுகிறது.

புற்றுநோய்க்கு எதிரி

மிளகு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மிளகை தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும். எனவே சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரை, மருத்துவமனை என செல்லாமல் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துங்கள்.

பொறுப்பு துறப்பு:இது போன்ற வைத்தியக் குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி செயல்படவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+