தூங்கும் முன்பு டீ குடிக்கிறீங்களா? இரவில் காபி சாப்பிடலாமா? அப்ப கிரீன் டீ குடிக்கலாமா? இதை பாருங்க
சென்னை: இரவில் சிலர் காபி, டீ குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.. இப்படி இரவு நேரத்தில், சூடான பானங்கள் அருந்துவது நல்லதா? இதனால் உடலுக்கு கெடுதல் ஏற்படுமா? இதுகுறித்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகள் என்ன?
பெரும்பாலானோர், வேலை, நேரமின்மை காரணமாக பகல் முழுக்க சாப்பிட முடியாமல் போய்விடும்.. எனவே, இரவு நேரம் அதிகம் சாப்பிட நேரிடுகிறது.. இரவில் அதிகமாக சாப்பிட்டு, ஓய்வும் எடுக்கிறார்கள்.. இப்படி அதிகமாக சாப்பிட்டு தூங்குவதே உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்.

இரவு உணவு: இரவு உணவு மட்டுமல்ல, சிலருக்கு இரவு சாப்பிட்டதுமே டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.. இதுவும் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.. அதுமட்டுமல்ல, காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை கெடுத்துவிடும்.. அத்துடன் மெல்ல மெல்ல உடல் பருமனுக்கும் வழி வகுக்கும்..
டீ குடித்துவிட்டு தூங்கினாலும் அதுவும் கெடுதிதான்.. இதனால், தூக்கம் தடைபடுவதுடன், தலைவலி பாதிப்பும், கவலையும் ஏற்பட்டுவிடும்.. இதற்கு காரணம், டீயில் உள்ள கஃபீன் (caffeine)தான். இதுஒருவகையில், டீ என்ற போதைக்குள் விழ வைத்துவிடும்.. டீ குடிக்காவிட்டால் தூக்கமே வராது என்ற எண்ணத்தையும் தந்துவிடும். அப்படியே டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால், பிளாக் டீ குடிக்கலாம்..
பால் டீ: ஏனென்றால், டீயில் உள்ள ஃபேளவனாய்டுகள் அழற்சிக்கு எதிர்வினையாற்றுகிறது... இது உடலுக்கு கெடுதலை தராது.. பாலுடன் சேர்த்து டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல, கிரீன் டீ குடிப்பது, உடலுக்கு எப்போதுமே நல்லதுதான்.. ஆனால், கிரீன் டீ என்றாலும்கூட, இரவு சாப்பிட்டதும் குடிக்கக்கூடாது. இதனாலும், தூக்கம் தடைபட்டு, உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள்., தேவைப்பட்டால், இரவு நேரங்களில் பால் அல்லது மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம்.
டீ, காபி என்றில்லை, இரவு உணவுக்கு பிறகு தண்ணீர் அதிகமாக குடிப்பதையும் தவிர்க்க வேண்டுமாம். இதனாலும் தூக்கம் பாதிக்கும்.. எனவே, 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, 20 நிமிடமாவது நடைபயிற்சி செய்துவிட்டு தூங்க சென்றால், செரிமானம் சீராகும்.. உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.. நிம்மதியான தூக்கமும் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
காலை உணவு: அதுமட்டுமல்ல, வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். அதேபோல, காலை உணவு சாப்பிட்டதுமே டீ குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். காலை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் டீ குடிக்க வேண்டுமாம்.. அதேசமயம், தினமும் இரண்டு முறை மட்டுமே டீயை குடிக்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications