ஆஹா.. ஆரம்பிச்சுட்டாரே திருமா? விசிகவால் வெறுப்பான விஜய்? பனையூர் பக்கம் பாமக காற்று! ட்விஸ்ட்!
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் ஒரு கூட்டணி மாறுதல் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக அரசில் அங்கம் வகிக்கிறோம் என சொல்லிவிட்டு, திமுக கூட்டணியில் தொடர்கிறோம் எனவும் பேசி இருக்கிறார் திருமாவளவன். தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவி, வாரிய தலைவர் பதவி என தவெகவை விசிக நெருக்குவதாகவும் அதற்கு இடம் கொடுக்காததால் திருமாவளவன் மாறி மாறி பேசி வருவதாக சொல்கின்றனர். இந்த நிலையில் தவெக - பாமக கூட்டணி அமைவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றது. தேர்தலை விட தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தான் அரசியல் களம் உச்சபட்ச கொதி நிலையில் இருந்தது. ஆண்ட திமுக, அதற்கு முன்பு ஆண்டு அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளியது தவெக.

சட்டசபைத் தேர்தலில் முதன் முறையாக தனித்து தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றி கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியானது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது.
தவெக அரசு
பின்னர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தனர். இடையில் அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கவும், அதற்கு பிறகு திருமாவளவனை முதல்வராக்கவும் முயற்சிகள் நடந்ததாக வெளியான பேச்சுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இறுதியில் ஒரு வழியாக முதல்வராக விஜய் பதவியேற்றார்.
விஜய் அமைச்சரவை
ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் ஏற்கனவே சொல்லி இருந்ததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதற்கிடையே திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்றதால் அந்த கட்சியினர் மற்ற கட்சிகளை மிகக் கடுமையாக சாடினர். அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர மற்ற அனைத்து தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளை வெளுத்து வாங்கினார்.
திருமாவளவன்
இதற்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணியில் இருந்து பேசிவிட்டு தான் வெளியே வந்தோம் என்ற திருமாவளவன், அதற்குப் பிறகு சொல்லி விட்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார். தொங்கு சட்டசபை அமையும் என்பதால் சட்டமன்றத் தேர்தலில் திருமா போட்டியிட திட்டமிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அவர் போட்டியிடவில்லை.
விடுதலை சிறுத்தைகள்
இப்படி மாறி மாறி பேசி வந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் தற்போது தமிழக வெற்றிக்கழக கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது என பேசி அதிர வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு பின்னணியில் சில காரணங்களும் சொல்லப்படுகிறது.
துணை முதல்வர் பதவி
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் நடத்தில் மாவட்ட நிர்வாகிகள் திருமாவளவனை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டணி அரசில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்க வேண்டும், வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் மூன்று மேயர் பதவி என அடுக்கடுக்கான கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் விஜய் தரப்பிடம் வைத்ததாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர் நெருக்கடிகளால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர்.
பாமக
இரண்டு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிது இதில் துணை முதல்வர் பதவி வேறு வேண்டுமா என பனையூர் வட்டாரம் கோபத்தில் இருக்கிறதாம். இதற்கிடையே நான்கு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாமகவும் பனையூர் பக்கம் நெருங்கி வருகிறது என்கின்றனர். தேர்தலுக்கு முன்பு சரி பின்பும் சரி பாமகவுடன் விஜய் நேரடி மோதல் போக்கை கையாளவில்லை. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட போதும் சமூகநீதி என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தான் நாடினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
ஆனால் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு ஆதரவு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக நடுநிலை வகித்ததையும் கவனிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த விஜய் உத்தரவிட்டது, காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் என பாமக தவெக இடையேயான உறவு நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் பாமக எம்எல்ஏக்களுடன் விஜயை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரை வெகுவாக பாராட்டியதையும் கவனிக்க வேண்டும். ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் தவெகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் பாமக கூட்டணி அமைவது உறுதி என்று சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.














Click it and Unblock the Notifications