பாமக காலியாகிடும்.. விஜய்யை பார்த்து அன்புமணியை எச்சரித்த வன்னியர் சங்கம்! விஷயம் இதுதான்!
சென்னை: சமீப காலமாக அதிமுகவிலிருந்து முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க.. இன்னொரு பக்கம், பாமக மீது தவெக ஓவர் நெருக்கம் காட்டி வருகிறது. இதை கவனித்த வன்னியர் சங்கம் தவெக கூட்டணி குறித்து எச்சரித்துள்ளது.
விஜய் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி. என்னதான் தத்துவார்த்த அரசியலில் தமிழ்நாட்டில் கை தேர்ந்த தலைவர்கள் இருந்தாலும், அதை தாண்டி விஜய் தனது பவரை சட்டமன்ற தேர்தலில் நிரூபித்து காட்டியிருக்கிறார்.

தேர்தல் வெற்றி
இந்த வெற்றியுடன் தவெக நிற்கவில்லை. இதைத்தாண்டி கட்சி பயணிக்க விரும்புகிறது. எனவே அதிமுகவை முழுமையாக ஈர்க்க காய்களை நகர்த்தி வருகிறது. விஜய் எதிர்பார்த்ததை போலவே அதிமுக இன்னாள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் தவெகவுக்கு ஜம்ப் அடித்திருக்கிறார்கள். இப்போது வரை 60% அதிமுகவினர் தவெகவில் இணைந்திருக்கின்றனர். இன்னும் 30% இணைப்பு நடக்க வேண்டி இருக்கிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார்.
மௌனம் காக்கும் எடப்பாடி
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு பெரியதாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதனால் சாரை சாரையாக தவெக நோக்கி நிர்வாகிகள் போய்க்கொண்டே இருக்கின்றனர். எடப்பாடியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
சூழல் இப்படி இருக்கையில், பாமக பக்கம் தனது பார்வையை திருப்பியிருக்கிறது தவெக. என்னதான் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற கூட்டணி கட்சிகள் உதவியிருந்தாலும், விசிக மற்றும் இடதுசாரிகளை கூட்டணிக்குள் இருப்பது தவெகவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. அவர்கள் வைக்கும் டிமாண்டை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. மட்டுமல்லாது அரசின் மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக வைக்கின்றனர்.
விசிகவுக்கு மாற்று
அதிலும் குறிப்பாக விசிகவுக்கு வெறும் 2 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட, அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், வழங்கப்பட்ட துறையில் திருப்தியில்லை என்று விசிகவின் பேச தொடங்கியிருக்கின்றனர். மேலும் திமுக கூட்டணியிலிருந்து உறுதியாக வெளியேறாமல் இருக்கிறார்கள். எனவே விசிகவுக்கு மாற்றாக பாமகவை உள்ளே இழுக்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.
இதை குறிப்பிட்டு, தவெக கூட்டணியிக்கு போனால் வன்னியர் வாக்குகள் மொத்தமாக கையைவிட்டு போய்விடும் என்று வன்னியர் சங்கம் அன்புமணி ராமதாஸுக்கு எச்சரித்துள்ளது.
அன்புமணிக்கு வார்னிங்
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்திருந்தாலும் பாமக 4 எம்எல்ஏகளை வென்றிருக்கிறது. இருந்தும் கூட தவெக கூட்டணிக்கு போனால், விஜய் மீது இருக்கும் ஈர்ப்பால் வன்னியர் வாக்காளர்கள் தவெக பக்கம் சாய்வார்கள். சிறுபான்மையினர், பட்டியலின வாக்குகளை குறி வைத்திருப்பதை போல.. வன்னியர் வாக்குகளையும் தவெக குறி வைத்திருக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பதை போல.. கூட்டணிக்கு போனால், பாமகவின் வாக்கு வங்கிக்கு சேதாரம் ஏற்படும்.
பாஜக உடன் கூட்டணி வைத்தபோது, வன்னியர் இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் பக்கம் போவதை தடுக்க வேண்டும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்திருந்ததை வன்னியர் சங்கம், தவெக-பாமக விஷயத்தில் நினைவுபடுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications