ஸ்பீக்கரில் கேட்ட குயில் சத்தம்.. நாகை மரக்கிளையை கண்டு அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: குயில்களையும் மற்ற பறவைகளையும்போல் வேட்டையாடக் கூடாது என்று சட்டமே உள்ளது.. அவற்றை பிடிக்கவும் கொல்லவும் சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும், தொடர்ந்து குயில்களை பிடிக்கும் செயல்கள் திருட்டுத்தனமாக ஆங்காங்கே நடக்கிறது.. இதோ இப்போதுகூட, நாகையில் குயில்களின் ஓசையைப் பயன்படுத்தியே அவற்றை வலையில் சிக்க வைக்கும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார். கடைசியில் நாகை போலீஸ் என்ன செய்தது தெரியுமா?

இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்படும் பறவைகளை வேட்டையாடுவது, பிடிப்பது, கொல்வது ஆகியவை குற்றமாகும். இதற்கு சட்டப்படி தண்டனை விதிக்கப்படும்.

Nagapattinam Bird Hunting Case

குயில்களை ஏன் வேட்டையாடக்கூடாது?

குயில்கள் இயற்கையின் உணவு சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை சாப்பிடுவதால், விவசாயத்துக்கும் உதவுகின்றன.. அதனால் குயில்களின் இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் இயற்கை சூழலிலும் பாதிப்பு ஏற்படலாம். அதனால்தான் குயில்களை பிடிக்கக்கூடாது என்கிறார்கள்.

அதேபோல காட்டுப்பறவைகள் வேட்டையாடப்படுவதற்கு இறைச்சி தேவையும் ஒரு காரணமாக உள்ளது. சிலர் இந்த பறவைகளின் இறைச்சியை உண்பதற்காகவே பிடிக்கிறார்கள்..

குயிலின் இறைச்சி அல்லது உடல் பாகங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். ஆனால், இத்தகைய நம்பிக்கைகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், குயில்களை வேட்டையாடப்படுவது முற்றிலும் நீங்கவில்லை..

அதுமட்டுமல்லாமல், இப்படி ரகசியமாக காட்டுக்குள் பிடிக்கப்படும் பறவைகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் சிலர் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.. பறவைகள் பாதுகாக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவை என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததும் வேட்டைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நாகையில் நடந்தது என்ன?

இப்படிப்பபட்ட சூழலில்தான் நாகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் சியாம்சுந்தர் தலைமையிலான வனத்துறையினர் விழுந்தமாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல்மேடு பகுதியில் மரத்தில் வலைத்தட்டு அமைத்து பறவைகளைப் பிடிக்கும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டிருப்பதை கவனித்துள்ளனர்..

அந்த நபர் பேட்டரி ஸ்பீக்கர் மூலம் குயில் ஓசையை எழுப்பியதுடன், அந்த சத்தத்தை கேட்டு வந்த குயில்களையும் வலையில் சிக்க வைத்து வேட்டையாடியிருக்கிறார்.. இவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது.

ஸ்பீக்கர் மூலம் குயில் ஓசை

அதேபோல, தெத்தி பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த வயல்வெளியில் ஏர்கன் மூலம் பறவைகளை வேட்டையாடிய நாகூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த ஏர்கன், வலைத்தட்டு, பேட்டரி ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், வேட்டையாடப்பட்ட பறவைகளையும் மீட்டனர்.

2 பேருக்குமே ஃபைன்

கைதான 2 பேரையும், வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இறுதியில் ராஜமாணிக்கத்துக்கு ரூ.20 ஆயிரமும், முபாரக்குக்கு ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பிறகு, வேட்டையாடப்பட்ட பறவைகளை வனத்துறையினர் உயிருடன் பாதுகாப்பாக மீண்டும் பறக்கவிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறையினர், "பறவைகளை வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் நில உரிமையாளர்கள் மீதும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+