திருச்செந்தூரில் முதல்வர் விஜய்க்கு அரோகரா.. 'அவங்க தெருக்கூத்தாடிகளா'.. அமைச்சர் காட்டமான விளக்கம்
தூத்துக்குடி: மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் முதல்வர் விஜய்க்கு அரோகரா பாடியது குறித்து விளக்கம் அளித்தார். "முதலமைச்சரும் சரி, நாங்களும் சரி, இது போன்ற புகழ் பாடுறதை நாங்க விரும்புறது கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சரும் அதை விரும்ப மாட்டாங்க அப்படிங்கிறதுதான் நாங்க பாடகர்கள்கிட்டயும் சொல்லியிருந்தோம்" என்று கூறினார்.
அமைச்சர் ரமேஷ் கூறுகையில், "சூரசம்ஹார விழா இந்த ஆண்டு உங்க எல்லாருக்குமே தெரியும், மிக விமர்சையாக, மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கு. குறிப்பாக கடந்த ஆண்டை விட மிகப்பெரிய அளவுல வந்து பக்தர்கள் கூட்டம் இந்த முறை இருந்துச்சு. அதேபோல சண்டே (ஞாயிற்றுக்கிழமை) என்பதனால மிகப்பெரிய அளவுல பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைத்து வகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை எல்லாம் நம்ம பண்ணியிருந்தோம். நீங்களுமே உங்களுடைய எல்லா மீடியாக்களும் அங்கே இருக்கக்கூடிய அந்த ஏற்பாடுகளைப் பற்றியெல்லாம் மக்கள்கிட்ட சிறப்பாகக் கொண்டு போய் சேர்த்திருந்தீங்க. மிகச் சிறப்பாக அரசாங்கம் தன்னுடைய பணிகளை எல்லாம் செய்து, நீங்க எல்லாருமே கொண்டு போய் சேர்த்திருந்தீங்க. அதற்கு முதல்ல உங்க எல்லாருக்குமே என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

நீங்க சொல்லக்கூடிய அந்த விஷயத்தைப் பற்றி ஏற்கனவே பாடகர்கள் வந்து அதற்கான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க. நானுமே அவங்ககிட்ட பேசும்போது அதற்கான விளக்கத்தை எல்லாம் சொன்னாங்க. இனிவரும் காலங்கள்ல கவனமாகச் செயல்படுவோம் அப்படிங்கிறதைச் சொன்னாங்க. ஏன்னா எப்பவுமே தமிழ்நாடு முதலமைச்சரும் சரி, நாங்களும் சரி, இது போன்ற புகழ் பாடுறதை நாங்க விரும்புறது கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சரும் அதை விரும்ப மாட்டாங்க அப்படிங்கிறதுதான் நாங்க பாடகர்கள்கிட்டயும் சொல்லியிருந்தோம். எல்லாமே வந்து கவனமாகக் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே அவங்களே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள்.
அதே சமயத்துல இப்படி ஒரு விஷயத்தை வேண்டுமென்றே பெரிதாக்குவது போல, ஒரு முன்னாள் அமைச்சராக இருந்து கொண்டு அவர் என்ன பேசியிருக்காரு அப்படின்னா, இந்தப் பாடகர்களை-குறிப்பாக அண்ணன் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள், வேல்முருகன் அவர்கள், அதேபோல அங்க குழந்தை தியா அவர்கள் எல்லாம் வந்து அன்றைக்குப் பாடினாங்க-இந்தப் பாடகர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வைத்து, 'தெருக்கூத்தாடிகளை வச்சு வந்து ஆன்மீகங்களைப் பாட வைக்கிறாங்க'ன்னு ஒரு முன்னாள் அமைச்சர் பேசியிருக்கிறது அப்படிங்கிறது வன்மையான கண்டனத்திற்குரியது.
முதல்ல ஒரு பாடகர்களை, ஒரு கலைஞர்களை எப்படி மதிக்கணும்னு தெரிஞ்சிருக்கணும். இந்த திமுகவுடைய மனநிலையே ஒரு பண்ணையார் மனநிலை. திமுகவுடைய மனநிலை ஒரு பண்ணையார் மனநிலை! அந்தப் பண்ணையார் மனநிலையில் உட்கார்ந்துகிட்டு பாடகர்களை வந்து 'தெருக்கூத்தாடிகள்' அப்படின்னு பேசுறது எந்த வகையில நியாயமா இருக்கும்? எத்தனை கலைஞர்கள் இருக்குறாங்க, நாட்டுப்புறக் கலைஞர்கள் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து, இந்தப் பாடகர்களை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து, 'தெருக்கூத்தாடிகளை வந்து நீங்க பாட வைக்கிறீங்க' அப்படின்னா இது எந்த மாதிரியான வார்த்தை? என்ன மாதிரியான மனநிலை முதல்ல இது? இப்படியா வந்து ஒரு வார்த்தையைப் பிரயோகம் பண்றது, 'தெருக்கூத்தாடிகள்'ன்னு சொல்லிட்டு?
இதேதான் வந்து தொடர்ந்து நீங்க பார்த்தீங்கன்னா திமுக வந்து எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் பண்ணுச்சு. நம்முடைய முதல்வர் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கும்போது இதே வார்த்தையைத்தான் பயன்படுத்துனாங்க. அதற்கான விளக்கத்தை நம்முடைய முதலமைச்சர் ஏற்கனவே சொல்லியிருக்காரு. இப்ப பாடகர்கள் மேலயும் அதே விமர்சனத்தை வைக்கிறாங்க. அப்ப ஒரு பண்ணையார் மனநிலையில இருந்துகிட்டு பாடகர்களை, அந்த ஆன்மீகக் கலைஞர்களை எல்லாரையுமே இப்படி 'தெருக்கூத்தாடிகள்' அப்படின்னு சொல்லிட்டு நீங்க விமர்சிக்கிறீங்க அப்படின்னா, அது எந்த மாதிரியான பண்ணையார் மனநிலை அப்படிங்கிறதை நீங்க தெரிஞ்சுக்கணும்.
அவங்க தெருக்கூத்தாடிகளா
இதுல என்ன ஒரு விஷயம்னா, இதே பாடகர்கள் கடந்த ஆட்சியில் வந்து மேடைகளில் பாடுனாங்களே, அப்ப அவங்க தெருக்கூத்தாடிகளா தெரியலையா? இதே பாடகர்களுடைய பாடல்களைப் பல இடங்கள்ல பாடியிருக்காங்களே, அப்ப இந்த வார்த்தை வரலையா? அது என்ன இப்ப இந்த ஆட்சியில் பாடும்போது மட்டும் அந்த வார்த்தை வருது? அப்ப அந்தப் பண்ணையார் மனநிலை ஒழிக்கப்பட வேண்டிய மனநிலை. இந்த மாதிரியான பண்ணையார் மனநிலைக்கு மக்களே அதற்கான பதிலளிச்சிருக்காங்க. அதனாலதான் இந்த ஆணவத்திற்காகத்தான் இந்தத் தீர்ப்பை வந்து மக்கள் அடுத்த தேர்தல்ல கொடுத்திருக்காங்க.
ஸ்ரீரங்கம் 50 கோடி நிலம்
அவங்களுக்கு வேற எந்த விமர்சனமும் தெரியாது, திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டு இருப்பாங்க. நான் என்ன கேக்குறேன், 'விதிகள் எல்லாம் மீறிட்டோம், விதிகள் எல்லாம் மீறிட்டோம்'னு சொல்றாங்களே... சரி, எந்த விதியின் அடிப்படையில முன்னாள் அமைச்சர் அவர்கள் ஸ்ரீரங்கத்துல 50 கோடி லேண்டை (நிலத்தை) சொந்தக் கட்சி அலுவலகம் நடத்துறதுக்கு பெயர் மாற்றம் அனுமதிச்சாரு? அப்ப கோயிலுடைய நிலத்தை வந்து சொந்த திமுக கட்சிக்காரன் பெயர் மாற்றி ஸ்ரீரங்கத்துல கட்சி அலுவலகம், திமுகவுடைய கட்சி அலுவலகம் நடந்துட்டு இருந்துச்சு. நம்ம ஆட்சிக்கு வந்த உடனே அதை கண்டுபிடிச்சு, அதன் மேல நடவடிக்கை எடுத்து, கம்ப்ளைன்ட் கொடுத்து இன்னைக்கு அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்கிறோம்.
அக்கறை வந்திருச்சு
அப்ப எந்த விதிகளின் அடிப்படையில வந்து கோயில் இடத்தைத் திருட விட்டீங்க? திருடுறதை எப்படி வேடிக்கை பார்க்க விட்டீங்க? அப்ப கோயில் நிலத்தை எல்லாம் திருடி திமுகவினர் அபகரிக்கிறவங்களுக்கு இப்ப என்ன திடீர்னு அக்கறை வந்துருச்சு? அப்ப கோயில் திருடர்கள் திமுகவினருக்கு திடீர்னு என்ன அக்கறை வந்துருச்சு? அப்ப என்ன வார்த்தை பயன்படுத்துறோம், என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசணும். ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை நிச்சயமா இருக்கும்.
கோயில் சொத்துக்கள் திருடிய திமுகவினர்
அப்ப என்ன பேசுறோம், எப்படி நடந்துக்கிறோம்... நீங்க என்ன பண்ணியிருக்கீங்க கடந்த அஞ்சு ஆண்டு கால ஆட்சியில?
எப்படி கோயில் நிலங்களை எல்லாம் திமுகவினர் அபகரிச்சு வச்சிருக்காங்க, எப்படி திமுகவினர் எல்லாம் கோயிலோட இடத்தை லீஸ்க்கு எடுத்து உள்வாடகை விட்டு சம்பாதிச்சுட்டு இருக்காங்கன்னு ஒவ்வொன்னா எடுத்துக்கிட்டு இருக்கிறோம், ஒவ்வொன்னா நாங்க வெளியில் கொண்டு வருவோம். அதற்கு எக்ஸாம்பிள்தான் ஸ்ரீரங்கம் 50 கோடி நில விவகாரம். அப்ப இப்படியெல்லாம் கோயில் நிலங்களையும் கோயில் சொத்துக்களையும் வந்து திருடிவிட்டு, இப்ப என்னமோ வந்து விதிகளைப் பற்றி எல்லாம் வந்து அக்கறை இருக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க.
தெளிவாக சொல்லிட்டோம்
தெளிவாகச் சொல்லிட்டோம். நாங்க விளக்கம் கேட்டாச்சு, அந்த விளக்கத்தை வந்து பாடகர்களும் கொடுத்திருக்கிறாங்க, இனி வரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறாங்க. அதைத் தாண்டி இப்படி வந்து பண்ணையார் மனநிலையில் அவர்களைப் போய் 'தெருக்கூத்தாடிகள்' என்று பேசுறதும், மற்ற விஷயங்களை... இது மாதிரியான விஷயங்களைத் தவறாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்குது, அதற்குக் கண்டிப்பாக எதிர்வினைகள் இருக்கும்.
விளக்கம் கேட்டிருக்கிறோம்.
அதான் சொல்றோம், விளக்கம் கேட்டிருக்கோம், இனி வரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போலத்தான் நாம வந்து ஒவ்வொரு தடவையும்... இதுபோல இனிமேல் நடந்துச்சுன்னா நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் அப்படிங்கிறதைச் சொல்லியிருக்கிறோம்.
தெளிவாகச் சொல்லிட்டோம், அவங்களே சொல்லிட்டாங்க (விளக்கம் கொடுத்துட்டாங்க).முதல்ல எதுக்காக, என்ன தவறு செஞ்சாங்க, அவங்க எதனால அப்படி செஞ்சாங்கங்கிறதை விளக்கம் கேட்டுத்தானே முடிவு பண்ணனும்? முதல்ல விளக்கம் கேளுங்க, முதல்ல விளக்கம் கேளுங்க. முதல்ல விளக்கம் கேட்டு அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் என்ன செய்யணும்னு முடிவு பண்ணப் போறோம்.
ஒரு நிமிஷம் இருங்க சார்
ஒரு நிமிஷம் இருங்க சார், ஒரு நிமிஷம் இருங்க சார். நாங்க இதைத்தான் முதல்லயும் சொல்றோம். இந்த மாதிரியான புகழ் பாடுறதை நாங்களும், முதலமைச்சரோ யாரும் விரும்புறது கிடையாது. அதைச் செய்யாதீங்கன்னு மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கோம். என்ன செய்யாதீங்கன்னு சொல்லியிருக்கிறோம், அதற்கான விளக்கத்தைக் கேட்டிருக்கோம், அந்த விளக்கத்தின் அடிப்படையில்... நடவடிக்கை எடுப்போம்." இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.




Click it and Unblock the Notifications
